தனியார் பள்ளிகளை பாதுகாத்தால் தான் தமிழகத்தில் கல்வி வளரும்

தனியார் பள்ளிகளை பாதுகாத்தால் தான் தமிழகத்தில் கல்வி வளரும் என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளை பாதுகாத்தால் தான் தமிழகத்தில் கல்வி வளரும்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தனியார் பள்ளிகள் சொத்து வரி கட்ட நிர்ப்பந்தித்து பள்ளிகளுக்கு சீல் வைத்து ஜப்தி செய்து வரும் நடவடிக்கைகளை நிறுத்த கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தனியார் பள்ளிகள் சொத்து வரி கட்ட நிர்ப்பந்தித்து பள்ளிகளுக்கு சீல் வைத்து ஜப்தி செய்து வரும் நடவடிக்கைகளை நிறுத்த கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில செயலாளர் நந்தகுமார், கொரானா காரணமாக தமிழ்நாட்டில் 2 ஆண்டு காலமாக பள்ளிகள் செயல்படவில்லை. இந்த நேரத்தில் சொத்து வரி கேட்டு உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்து வருகிறார்கள், கொடுமை என அவர் தெரிவித்தார்.

மேலும் நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யவில்லை. அரசு பள்ளியில் Tc இல்லமால் அட்மிஷன் போடுகிறார்கள் அதனை நிறுத்த வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு ஆர்டிஓ லட்ச கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள். தனியார் பள்ளிகளை பாதுகாத்தால் தான் தமிழகத்தில் கல்வி வளரும் என அவர் தெரிவித்தார். முன்னதாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com