தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளேடு நடத்தும் கருத்தரங்கில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போரை உரையாற்றிய முதலமைச்சர், நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக்கல்லை போடுவதாகவும், அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிகாரத்தை பயன்படுத்தி அறிவியலுக்கும் பகுத்தறிவிக்கும் ஒவ்வாத பழமைவாதங்களும் மூடக்கருத்துக்களும் கல்வியில் திணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பாஜக ஆட்சியில் கல்வி மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.