தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை பரவுவதற்கான வாய்ப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 25 வது மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .

அப்போது பேசிய அவர் , தமிழகத்தில் இன்று நடைபெற்ற 25 வது மெகா தடுப்பு முகாமில் 5 லட்சத்து 53 ஆயிரத்து 459 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர் எனவும் ,அதேபோல் தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோர்  5 கோடியே 32 லட்சம் நபர்கள் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் ,4 கோடிக்கும் மேற்பட்டோர் 2 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர் என்றும் கூறினார்.

தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 92 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் அதேபோல் 80% இரண்டாம் தவணை செலுத்தப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் 12- 14 வயதுடையவர்கள்4.29 லட்சம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும்  கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் 51 லட்சம் நபர்கள் தற்போது வரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளதாகவும் அதேபோல் 1.34 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளதாகவும் கூறினார்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும்

பிற நாடுகளில் தொடர்ந்து கொரோனா 4 ஆம் அலை பரவும் சூழ்நிலை உள்ளதால் கொரனோ தோற்று விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் மற்ற நாடுகளைப் போல் நாமும்  கொரானா தொற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும் என்றும் கூறினார்.

மேலும் வரும் நாட்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com