ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு

உக்ரைனின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு

நேட்டோ கூட்டமைப்புடன் சேரும் உக்ரைனின் விருப்பத்திற்கு எதிராக ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில் நேட்டோ கூட்டமைப்புடன் உக்ரைன் சேராது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன் தினம் அறிவித்தார். எனினும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது தாக்குதலை நிறுத்தவில்லை. இதனிடையே, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் உக்ரைன் மக்களின் நிலை குறித்தும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உதவிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com