மக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் இயக்கம்- மா.சு

மக்கள் பாதிக்கப்படாத வகையில் பேருந்துகள் இயக்கம்- மா.சு

தொழிற்சங்கங்கள் போராட்டம் என்பது அவர்கள் எடுத்த முடிவு எனவும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 12.39 லட்சம் ரூபாயில் சைதாப்பேட்டையில் 3 ஸ்மார்ட் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளது எனவும் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் வசதிகள் மற்றும் கற்பிக்கும் தன்மை அதிகமாக இருந்து வருகிறது எனவும் மாநகராட்சி பள்ளி கட்டமைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதற்கு தொண்டு நிறுவனங்கள் உறுதுணையாக உள்ளது என்றார்.

மேலும் 'வருமுன் காப்போம் திட்டம்' என்பது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டுவந்த திட்டம் என்பதால் 2011க்கு பிறகு இந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. ஆனால் தற்போது மீண்டும் 'கலைஞர் வருமுன் காப்போம் திட்டம்' என்று நடைமுறைக்கு கொண்டு வந்த சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையிலும், கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார். எனினும் பொதுமக்கள் பாதிக்கப்படா வண்ணம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com