சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சிறந்து விளங்கிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது

தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான விருதுகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவித்தது.

அதன்படி, 2016 - 17 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் திருவாரூரில் ஆட்சியராக இருந்த நிர்மல் ராஜுக்கு விருதும் ,2018 - 2019 - ஆம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தனுக்கு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2019- 20 ஆண்டுக்கான விருது, விருதுநகர் ஆட்சியர் சிவஞானத்திற்கும், 2020 - 21 ஆம் ஆண்டுக்கான விருது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கந்தசாமிக்கும் அறிவிக்கப்ட்டுள்ளது. இதனால் அந்ததந்த மாவட்ட பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com