இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதி பாதிப்புகள் குறையும் வகையில் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறது.
அந்த வகையில், SBI வங்கி சமீபத்தில், எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளது. ATM சேவையைப் பயன்படுத்தும் அனைத்து வங்கி பயனர்களுக்கு இந்த பாதுகாப்பு செயல்முறை பயன்பெறும் என்பதனால் முழுமையாகப் படித்துப் பயன்பெறுங்கள்.
உங்கள் ஏடிஎம் பாதுகாப்பை உறுதிப்படுத்த 5 உதவிக் குறிப்புகளை நீங்கள் எப்போதும் பிறப்பற்ற வேண்டும் என்று SBI அறிவித்துள்ளது. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் இதோ.
1. ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது உங்கள் சுற்றுப்புறங்களில் கவனமாக இருப்பது சிறந்தது.
2. உங்கள் கார்டு சரியாக ATM இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும் மற்றும் இயந்திரத்தில் அல்லது அதைப் பற்றி சந்தேகத்திற்குரிய சாதனம் எதுவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
3. உங்கள் கையால் கீபோர்டை மறைத்து உங்கள் பின் நம்பரை உள்ளிடவும். யாரும் உங்கள் PIN நம்பரை பார்க்க முடியாத படி பார்த்துக்கொள்வது உங்களின் கடமையாகும்.
4. உங்கள் PIN நம்பரை அவ்வப்போது மாற்றம் செய்வது மிகவும் பாதுகாப்பானது.
5. உங்கள் வங்கி கணக்கு அறிக்கையைத் தொடர்ந்து கண்காணிப்பது பாதுகாப்பானது. வங்கி அறிக்கையில் ஏதேனும் திடீர் மாற்றம் இருந்தால் உடனே வங்கியை நேரில் சென்று அணுகவும்.