சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவும், அசல் விடைதாளை கொரியர் மூலம் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது என்ற அவர், சில மாணவர்கள் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ததாகவும் அந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என வெளியாகி உள்ள தகவல் தவறானது என்றார்
மேலும் தாமதமாக விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் நிச்சயம் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் "கல்விக் கடன் ரத்து" செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி தமிழக அரசின் நிதிநிலை சரியானவுடன் கல்விக்கடன் குறித்த அறிவிப்பு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற உள்ளது.