அனைத்து கட்டுப்பாடுகளும் இம்மாதம் 31-ம் தேதி வரை தான் ...

அனைத்து கட்டுப்பாடுகளும் இம்மாதம் 31-ம் தேதி வரை தான் ...

முக கசவம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தவிர மற்ற அனைத்து கட்டுப்பாடுகளையும் இம்மாதம் 31ம் தேதிக்கு மேல் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது முதல் 'தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்' கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அதனை மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இம்மாதம் 31ம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை நீட்டிக்க தேவையில்லாத கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த 7 வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு செங்குத்தான சரிவை கண்டுள்ளது; இவை மட்டும் அல்லாமல் கொரோனா பாதிப்பு நேர்மறை தொற்றின் விகிதம் 0.28% ஆக குறைந்துள்ளது. மேலும், 181.56 கோடி தடுப்பூசிகள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளது காரணமாக தொற்று பாதிப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் உள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாநில அரசுகள் நீக்கலாம் எனவும் அக்கடிதத்தில் அஜய் பல்லா கேட்டுக்கொண்டுள்ளார். அதேவேளையில் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை நீக்கும் போது அதிக கவனம் தேவை எனவும் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மட்டுமே தற்போது விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்தும், கண்காணிப்பு களை எவ்வித சமரசமுமின்றி செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அக்கடிதத்தில் மத்திய உள்துறை செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com