ஒரே நேரத்தில்4 டிவைஸ்களில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாம் !

ஒரே நேரத்தில்4 டிவைஸ்களில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாம் !

மெட்டாவுக்கு சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பார்ம் ஆன வாட்ஸ்அப் கடந்த சில மாதங்களாக அதன் பீட்டா வெர்ஷனில் 'மல்டி டிவைஸ்' ஆதரவிற்கான செயல்பாட்டைச் சோதித்து வந்த நிலைப்பாட்டில் தற்போது இந்​​நிறுவனம், பீட்டாவில் டெஸ்டிங்கை நிறுத்திவிட்டு மல்டி டிவைஸ் ஆதரவை ஸ்டேபிள் வெர்ஷனுக்கு வெளியிட தொடங்கியுள்ளது.

பீட்டாவில் இருக்கும்போது, ​​யூசர்கள் குறிப்பிட்ட அம்சத்தைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இருந்தது. ஆனால் ஸ்டேபிள் வெர்ஷனில் அணுக கிடைக்கும் மல்டி டிவைஸ் ஆதரவானது ஒரு 'ஆப்ட்-இன்' அம்சமாக கிடைக்கவில்லை, அதாவது யூசர்கள் இதை பயன்படுத்தலாமா வேண்டாமா என்கிற விருப்பம் இருக்காது. மாறாக இது எல்லா யூசர்களுக்கும் தானாகவே செயல்படுத்தப்படும்.

இதன் கீழ், ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு டிவைஸ்களில் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தலாம் அதுவும் யூசர்கள் லாக்-இன் செய்யும் ஒவ்வொரு முறையும் அவர்களின் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்ய வேண்டிய தேவை இல்லை!

பீட்டாவிலிருந்து "வெளியேறும்" இந்த மல்டி டிவைஸ் அம்சம் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், மல்டி டிவைஸ் அம்சமானது பீட்டா டெஸ்டிங்கிற்கு வெளியே இருப்பதை பல வாட்ஸ்அப் யூசர்கள் கண்டறிந்துள்ளனர்.

அறியதோர்களுக்கு, 'மல்டி-டிவைஸ் சப்போர்ட்' என்பது யூசர்கள் தங்கள் மொபைலில் மட்டுமின்றி மேலும் நான்கு டிவைஸ்கள் வரை, வாட்ஸ்அப்பை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சம் ஆகும். ஆனால் இந்த இடத்தில், ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ இரண்டு வெவ்வேறு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியாது என்பது கவனிக்கத்தக்கது. மாறாக ஒரே நேரத்தில் நான்கு பிசிக்கள் அல்லது டேப்லெட்களின் மூலம் வாட்ஸ்அப் வெப் ப்ரவுஸர் வழியாக ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ கனெக்ட் செய்ய முடியும்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, நீங்கள் வாட்ஸ்அப்பின் வெப் ப்ரவுஸருக்கு -செல்ல வேண்டும். அங்கே ஸ்க்ரீனில் க்யூஆர் கோட்-ஐ காண்பீர்கள்.

- இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப்பைத் திறந்து, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள த்ரீ-டாட் மெனுவைக் கிளிக் செய்யவும்.

- லிங்க்டு டிவைஸஸ் என்பதை கிளிக் செய்து, பின்னர் "லிங்க் ஏ டிவைஸ்" என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

- இப்போது, ​​உங்கள் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யவும்; அவவ்ளவு தான்! இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை ஓரமாக வைத்துவிட்டு மற்ற டிவைஸ்களின் வழியாக - வழக்கம் போல - வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தலாம்.

logo
vnews27
www.vnews27.com