எந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்?

எந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்?

மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக, உயர் ரத்த அழுத்த பிரச்சனை இன்று மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது இளைஞர்களிடையேயும் மிகவும் பொதுவாக காணப்படும் நோய்களில் ஒன்றாக உள்ளது. உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், நீங்கள் அதிக காரம், இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இது போன்றவற்றை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சில பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை சீராக்கலாம்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் நாவல் பழம் உதவுகிறது. நாவல் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. நாவல் பழத்தில் உள்ள உள்ள எந்தோசயனின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கின்றன. எனவு இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

பூசணி விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பொட்டாசியம், மெக்னீசியம் இதில் காணப்படுவதால், இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com