எந்த மாதிரியான துணை அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி?

எந்த மாதிரியான துணை அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி?

திருமணம் செய்து கொள்வதற்கு முன் வருங்கால துணையாக போகிறவர் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான திருமண வாழ்க்கையை கொண்டு செல்ல தேவையான அடிப்படை அத்தியாவசிய குணங்களை கொண்டிருப்பதை ஒருவர் உறுதி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நிம்மதியான திருமண வாழ்வை வழிநடத்த இந்த விஷயங்கள் தான் முக்கியம்.

உங்களுக்கு துணையாக வர போகிறவரிடம் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவரை திருமணம் செய்து கொள்வது குறித்து நீங்கள் மறுபரிசீலனை செய்ய விரும்பலாம். திருமணம் செய்து கொண்டு பல்லாண்டுகள் வாழப்போவது நீங்கள் தான் என்பதால், உங்கள் இருவருக்குள்ளும் நல்ல இணக்கம் இருப்பது அவசியம். சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கான 5 குணங்களை இங்கே பார்க்கலாம்.

(1) பொறுப்பற்ற மற்றும் சிந்தனையற்ற ஒருவரை வாழ்க்கை துணையாக பெறுவது ஒரு நல்ல விஷயமாக இருக்காது. உங்களில் ஒருவர் மற்றவரின் விருப்பங்களை மாற்ற விரும்பினால், அது சிறந்த நடவடிக்கையாக இருக்காது. குறிப்பாக பணம், குழந்தைகள் மற்றும் குடும்பம் போன்ற முக்கியமான விஷயங்களில் நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் பொறுப்பாக கலந்தாலோசித்து ஒரே முடிவில் இருப்பது முக்கியம்.

(2) உங்களுக்கென்று இருக்கும் ஆர்வம், குறிக்கோள்கள் மற்றும் கனவுகளை அடைவதற்கு அவர் உறுதுணையாக இருப்பாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது லட்சியங்கள் குறித்து அவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது பாராட்டு மற்றும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் சோர்வாக இருக்கும் போது உங்கள் துணை எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க உங்களை ஊக்குவிக்க வேண்டும். உங்களின் சிறிய வெற்றிகளில் கூட உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு மிகப்பெரிய சியர்லீடராக இருக்க வேண்டும். உங்கள் ஆர்வத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஒருவரால் மட்டுமே திருமணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையை சுமூகமாக மாற்ற முடியும்.

(3) இந்த காலத்தில் இருவர் வேலைக்கு சென்றாலே குடும்பத்தை தங்குவது சிரமமான ஒன்றாக இருக்கிறது. எனவே நிதி ரீதியாக உங்கள் துணையால் குடும்பத்திற்கு எப்படி உதவ முடியும் என்பதை ஒருவருக்கொருவர் கலந்து பேசி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். குறிப்பாக நிதி மற்றும் பணம் விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். உங்கள் பார்ட்னரின் செலவு மற்றும் சேமிப்பு பழக்கம் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இதை புறக்கணிக்கவே கூடாது. புறக்கணித்தால் திருமணமான பின் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.

(4) இந்த காலத்து திரைப்படங்கள் துணையை கவர பெரிய சுற்றுலா தளங்கள் அலல்து இயற்கை சூழல் நிறைந்த இடங்களுக்கு அழைத்து செல்வது தான் சரியாக இருக்கும் என்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் உங்களுடன் வரும் ஒரு சிறிய ஷாப்பிங் கூட துணையையை மகிழ்ச்சியாக்கினால் உங்களுடன் இருக்கும் சிறிய தருணங்களை கூட அவர்கள் உற்சாகமாக அனுபவிக்கிறார்கள் என்று பொருள். எனவே இடங்களை பொருட்படுத்தமால் உங்களுடன் வெளியே இருக்கும் போது ஆனந்தமாக இருக்கிறாரா என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

(5) ஒரு உறவை பாதுகாப்பாக நீடிக்க உதவும் முக்கிய தூண்களில் நேர்மை முக்கியமான ஒன்றாகும். நேர்மையான மற்றும் நம்பகமான துணை உங்கள் திருமண வாழ்வை சிறப்பானதாக மாற்றுவார். உங்கள் துணைக்கு இந்த குணங்கள் இருந்தால் கட்டாயம் அவரை தவற விடாதீர்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com