
சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்க இயலும்.சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே மிக அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இவை நம்முடைய உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு உண்டாவது தடுக்கப்படும்.
போதுமான தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் அதிகப்படியான கேஜட்ஸ் பயன்பாடு, மாறிவிட்ட வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு என சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வெங்காயம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. குறிப்பாக, நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் ஏற்படும் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
நெஞ்சு சளியால் அவதிப்படுகிறவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பாக தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால், ஓரிரு நாட்களில் நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வாய் அல்லது மலத்தின் வழியே வெளியேறிவிடும். இந்த தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும்.