புதிதாக திருமணமானவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?

புதிதாக திருமணமானவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?

திருமணத்திற்கு பிறகு ஆண், பெண் இரு பாலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதிலும் பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். புதிய குடும்பத்தில் தன்னை இணைத்துக் கொள்வதும், புதிய குடும்பத்தின் ஒரு அங்கமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதும் எளிதான காரியமல்ல.

திருமணமான உடனேயே, புதிய வீட்டில் குடியேறுவதும், புதிய குடும்ப உறுப்பினர்களுடன் இணைவதும் எளிதானது அல்ல. திருமணத்திற்கு பிறகு பெண்ணின் மன மற்றும் உணர்ச்சி ரீதியில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இந்தியா போன்ற நாடுகளில் புதுப்பெண் தன் மாமியாரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பழக முயற்சிப்பது கடினமானதாக இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு ஒருசில தியாகங்களை செய்வதற்கு சில இளம் பெண்கள் தயாராக இருப்பதில்லை. புதிய வாழ்க்கைக்கு தயாராகுவதற்கு முன்பு நீண்ட காலமாக நேசித்து வரும் சுதந்திரமான வாழ்க்கையை கைவிடுவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும்.

திருமணத்திற்கு பிறகு ஒருசில தியாகங்களை செய்வதற்கு சில இளம் பெண்கள் தயாராக இருப்பதில்லை. புதிய வாழ்க்கைக்கு தயாராகுவதற்கு முன்பு நீண்ட காலமாக நேசித்து வரும் சுதந்திரமான வாழ்க்கையை கைவிடுவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும்.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மன நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஆண்கள் வருமானம் ஈட்டித்தரும் நபராகவும், பெண்கள் வீட்டு வேலை செய்பவர்களாகவும் பார்க்கப்படும் சூழலில் நிதி சார்ந்த பிரச்சினையையும் சந்திக்க நேரிடும். அத்தகைய அழுத்தம் மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய கூட்டுக்குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டிய பொறுப்பு புதுமணப் பெண்களுக்கு இருக்கிறது. அதனை எப்படி கையாளப் போகிறோம் என்பதை நினைத்து பதற்றத்திற்கு ஆளாகும்போது மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பணிபுரியும் பெண்களுக்கு வீடு, வேலை ஆகிய இரட்டை பொறுப்புகளை நிர்வகிப்பது கடினமாக இருக்கும்.

ஆண்களை பொறுத்தவரை நிரந்தர வேலை இல்லாத நிலை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும். அதிலும் திருமணத்திற்கு பிறகு வேலையை இழந்தவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். அதனை சமாளிக்க, பலர் போதை பழக்கம், மது பழக்கத்தை நாடுகிறார்கள். அது குடும்ப உறவுக்குள் கடும் விரிசலை ஏற்படுத்திவிடும்.

திருமணத்திற்கு பிறகு புதிய பொறுப்புகள் மற்றும் சவால்களை உணர்ந்து செயல்படும்போது மனச்சோர்வின் அறிகுறிகளை அனுபவிக்கலாம். ஒருவித மன நெருக்கடியை உணரலாம். அந்த சமயத்தில் மன நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானது. அது உடல் ஆரோக்கியத்திற்கும், உறவுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com