ஏலக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

ஏலக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

இந்தியர்களின் இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நன்மைகள் இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் வாசனையே அந்த உணவின் நுகர்வை அதிகரிக்கிறது. ஏலக்காய் வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றில் இருந்து விடுபட உதவுகிறது.

ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், உணவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை காணப்படுகின்றன,

இயற்கையாக தூங்க, தினமும் இரவில் தூங்கும் முன் குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள். இதனால் நல்ல உறக்கம் வருவதுடன் குறட்டை பிரச்சனையும் நீங்கும். இது தவிர, கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏலக்காய் மூலம் போக்கலாம்.

ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.

பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது. மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.

.

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது. ஏலக்காய் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதிலுள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com