தொப்பையை குறைக்க வேண்டுமா? 10 ஆயிரம் அடி நடந்தால் போதும் !!
நம்மை கேட்காமல் நம் உடலில் எக்ஸ்ட்ரா லக்கேஜாக வந்து ஒட்டிக் கொள்கிறது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க விரும்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்கள் விரும்பிய பலனைப் பெறவதில்லை.
இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.
குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களாலும், பிஸியான வாழ்க்கை முறையாலும் பலரது தொப்பையை குறைக்கும் ஆசை நிறைவேறுவதில்லை. கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் தொப்பை குறைந்து ஸ்லிம்மான தோற்றம் பெற வாய்ப்புகள் அதிகம்.
தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான முதல்நிபந்தனை உங்கள் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவேண்டும். இதற்காக குறைந்த கலோரிஉணவுகளைஉண்ணத்தொடங்குங்கள்.
காலை உணவில் ஓட்ஸ், மதிய உணவில் பருப்பு ரொட்டி, இரவு உணவில் லேசான உணவு.உங்களுக்காக நீங்கள் சில உடற்பயிற்சிகளைத் தேர்ந்தெடுங்கள், இது உங்கள் தொப்பை குறைப்புக்கு நல்ல ரிசல்ட் தரும். இதற்காக, உங்கள் தினசரி வழக்கத்தில் ஜிம்மிங் அல்லது ஏதேனும் விளையாட்டை சேர்த்துக்கொள்ளலாம்.
தொப்பையை குறைக்க, நீங்கள் இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டும். அதாவது தினமும் சுமார் 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். இது மிகவும் எளிதான உடற்பயிற்சி மற்றும் இதை செய்வதால் ஒரு நாளைக்கு 400 முதல் 500 கலோரிகளை இழக்க உதவும்.
காலையில் எழுந்து வெறும் வயிற்றில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடித்தால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்தால், அதிக உணவு உண்ணும் ஆசை குறையும்.
இனிப்பு பொருட்களை உட்கொள்வதைக் குறைக்கவும்.
உணவை பொறுமையாக அமர்ந்து சாப்பிடும் முறையை பழக்கப்படுத்துங்கள்
அதிக எண்ணெய் பொருட்கள், பர்கர்கள், பீட்சா, சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்.