வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா?

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க வேண்டுமா?

வெயில் காலத்தில் முகத்துக்கு ஃபேஸ் பேக் போட பழங்களை பயன்படுத்துவதான் சிறந்தது. ஃப்ரூட் ஃபேஷியல் வெயில் நேரத்தில் சிறப்பாக இருக்கும், அதற்கேற்ப கோடையில் விதவிதமான பழங்கள் கிடைக்கிறது. இந்த ஃப்ரூட் ஃபேஸ் பேக் எப்படி போடலாம் என்பதற்கான அனைத்து படிகளையும் இப்போது பார்க்கலாம்.

முதலில் உங்கள் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு இளநீர் சிறப்பாக உதவும். இளநீர் சிறிது எடுத்து கிண்ணத்தில் விட்டு காட்டனை அதில் நனைத்து முகம் முழுவதும் தடவி விடவும். 5 நிமிடங்கள் கழித்து முகத்தை துடைத்தால் சருமத்தின் ஆழம் வரை இருக்கும் கிருமிகள் வெளியேறிவிடும்.

ஸ்க்ரப் செய்வதற்கு பழங்களை எளிதாக பயன்படுத்தலாம். கிவி ஸ்க்ரப், ஆப்ரிகாட் ஸ்க்ரப், ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரப் என்று பலவகைகளில் கிடைக்கிறது. இதில் கிவி ஸ்க்ரப் ஆனது எல்லாவகை சருமத்துக்கும் பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரி ஸ்க்ரப் ஆயில் சருமத்துக்கு உதவும்.

கிவியை தோல் உரித்து உள் இருக்கும் பகுதியை கருப்பு விதையோடு மசித்து விடவும். இதை வட்ட வடிவில் முகம், கழுத்து, பின்கழுத்து பகுதியில் மென்மையாக மசாஜ் செய்தபடி தடவிவிடுங்கள்.

பிறகு 3 நிமிடங்கள் விட்டு முகத்தில் இருந்து எடுத்து சுத்தம் செய்து முகத்தை கழுவி எடுங்கள். ஃபேஷியல் எஃபெக்ட் கிடைக்கும்.

தர்பூசணியின் உள்ளிருக்கும் சதை பகுதியை மசித்து அதனுடன் நீர் சேர்த்து நன்றாக குலுக்கி விடவும். இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி முகம் முழுவதும் தடவி கொள்ளலாம். வியர்க்குரு, கட்டிகள் இல்லாமல் வைத்திருக்கும்.

சருமத்தை மசாஜ் செய்வதற்கு வாழைப்பழம் அல்லது அவகேடோ எடுக்கலாம். வாழைப்பழம் பழுத்தது எடுத்து நன்றாக மசித்து அதில் தேன் கலந்து முகத்தில் மென்மையாக மேல் நோக்கி மசாஜ் செய்யலாம்.

இதை மிக்ஸியில் அரைத்தால் நன்றாக க்ரீம் பதத்தில் இருக்கும். பயன்படுத்தும் போதே நீங்கள் உணர்வீர்கள். மசாஜ் செய்வதற்கே நன்றாக இருக்கும். 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம். பிறகு சில நிமிடங்கள் விட்டு முகத்தை துடைக்கலாம்.

அவகேடோவை எடுத்து உள்ளிருக்கும் பகுதியில் தயிர் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். அவகேடோவில் இருக்கும் எண்ணெய் தன்மையை தயிர் குறைக்கும். இரண்டையும் கலந்து முகத்துக்கு மசாஜ் செய்யலாம்.

கோடையில் உதடுகள் வறண்டு வெடிப்பை ஏற்படுத்தும். இரண்டு டீஸ்பூன் மாதுளைச்சாறுடன் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்காத வெண்ணெய் சேர்த்து கலந்து உதட்டின் மீது தடவி வரலாம். இதை தினமும் கூட செய்யலாம். வாரம் ஒரு முறை ஃப்ரூட் ஃபேஷியல் செய்யும் போது பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com