உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க !!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இதையெல்லாம் செய்யாதீங்க !!

பலரும் உடல் பருமன் பிரச்சனை மற்றும் அதிக எடையால் உண்டாகும் உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட சிக்கல்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். எவ்வளவோ முயற்சித்தும் பலன் பெறாத வருத்தத்தில் இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

ஒரு சில நாட்களுக்குள் பல கிலோ எடை குறையும் என்று எதிர்பார்க்க கூடாது. படிப்படியாக மற்றும் மெதுவாக எடை இழப்பது ஆரோக்கியமானது மட்டுமல்ல, நிலையானதும் கூட. ஒருவர் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போது அதற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் சில பொதுவான தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

எடை குறைப்பு முயற்சியில் இருக்கும் போது சிலர் வழக்கத்திற்கு மாறாக குறைவாக சாப்பிடுவார்கள். குறைவாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்ற நம்பிக்கை தவறு. குறைந்த கலோரி உணவை சாப்பிடுவது துவக்கத்தில் எடையை குறைக்க உதவினாலும், நாளடைவில் தொடர்ச்சியாக இப்பழக்கத்தை பின்பற்றுவது கடினமாகி விடும்.

நாம் ஒரு டயட்டை பின்பற்ற துவங்கும் போது நம் மூளையானது நாம் சிக்கலில் இருப்பதாக நினைத்து கொண்டு, கலோரிகளை எரிக்க தேவையான உடல் செயல்முறைகளை மெதுவாக்கும். மேலும் இதனால் தைராய்டு, வளர்சிதை மாற்றம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது. முன்பை போல அதிக அளவிலா சாப்பிடவும் கூடாது அதேசமயம் டயட் என்ற பெயரில் ஒரேடியாக சாப்பாட்டை குறைக்கவும் கூடாது.

டயட் என்ற பெயரில் உங்கள் உணவில் இருந்து புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு போன்ற முழு உணவு குழுவை நீக்க வேண்டாம். வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத்தை உங்களுக்கு இவை வழங்குவதால் உங்கள் டயட்டில் மேற்கண்ட சத்துக்கள் அடங்கிய உணவு பொருட்கள் அவசியம் இருக்க வேண்டும்.

எடையை குறைக்க விரும்பும் பெரும்பாலான மக்கள் அடிக்கடி செய்யும் மற்றொரு தவறு வெறுமனே உடல் பயிற்சியை மட்டுமே நம்பியிருப்பது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடலில் இருக்கும் கூடுதல் கிலோவை அகற்ற உடற்பயிற்சி அவசியம் என்றாலும் கூடவே கண்டிப்பான டயட் பிளான் மற்றும் பிற வாழ்க்கை முறை மாற்றங்களையும் செய்ய வேண்டும்.

அப்படி செய்யாமல் உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க நினைப்பது உங்கள் இலக்கை அடைய உதவாது.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்ப்பது அல்லது டிரைவிங் செய்வது உள்ளிட்டவை காரணமாகவும் உடல் எடை குறைப்பு இலக்கில் தொய்வு ஏற்படலாம். ஏனென்றால் நீண்ட நேரம் ஒரே இடத்தில அசையாமல் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறை காரணமாக, உங்கள் உடல் லிபேஸை உரைப்பது செய்வதை நிறுத்துகிறது. உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் கொழுப்பு-தடுக்கும் நொதி தான் லிபேஸ். இதன் உற்பத்தி நிறுத்தப்படுவதால் உடல் எடை குறையாது.

எடை குறைப்பு முயற்சியில் தூக்கத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். அப்படி இல்லாமல் தினமும் இதை விட குறைவான மணிநேரங்கள் மட்டுமே தூங்கி எழுந்தால், அப்பழக்கம் எடை குறைப்பு இலக்கை அடைவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com