கோடை காலத்தில் வரும் உஷ்ண நோய்களை தவிர்க்க செய்ய வேண்டியவை !!

கோடை காலத்தில் வரும் உஷ்ண நோய்களை தவிர்க்க செய்ய வேண்டியவை !!

கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய சில பொதுவான நோய்கள் உள்ளன. அவற்றில் வெப்ப பக்கவாதம் , நீரிழப்பு, சின்னம்மை, தட்டம்மை, டைஃபாய்டு, சன்பர்ன், ஹீட் ரேஷஸ் உள்ளிட்டவை பொதுவானவை. இதனிடையே நாடு முழுவதும் வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு (டயரியா) பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களின் கூற்றுப்படி, வெயிலில் நன்றாக அலைந்து திரிந்து விட்டு அல்லது வெயிலில் சுற்றும் போது ஐஸ் வாட்டர் அல்லது சில்லென்று குளிர்பானங்கள் குடிப்பது வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

மக்கள் வெயிலுக்கு பழகி வருகின்றனர். இந்த நேரத்தில் காய்ச்சல், இருமல் மற்றும் சளி பிடிக்காமல் பார்த்து கொள்வதில் மக்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் வெளியே விற்கும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை அதிகம் விரும்பும் இந்த சூழலில், கோடை கால கிளைமேட் காரணமாக பலருக்கும் வயிற்று போக்கு ஏற்படலாம். சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீர் அருந்துவது குறித்து மக்கள் கவனமாக இருப்பது முக்கியம்.

ஆகாரம் எதுவும் சாப்பிடாமலே வெறும் வயிற்றுடன் வெயிலில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம், டிஹைட்ரேஷன் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்கிறார். அதே போல பல சமயங்களில் தாகம் தணிந்தால் போதும் என்ற எண்ணத்தில் சாலையோர கடைகளில் தயார் செய்து விற்கப்படும் ஜூஸ்கள் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்பதை பற்றி கவலை கொள்ளாமல் குடிப்பதால் வயிற்றுப்போக்கு பிரச்சனையை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தவிர்க்கும் வழிகள்:

* நாளுக்குநாள் வெயிலின் அளவு அதிகரித்து கொண்டே செல்லும் என்பதால் எப்போதுமே போதுமான நீர் மற்றும் ஜுஸ்களை குடித்து ஹைட்ரேட்டாக இருக்க வேண்டும்.

* அசுத்தமான நீர், சுகாதாரமற்ற உணவு, பழைய உணவு அல்லது 4 மணி நேரத்திற்கு மேல் திறந்த நிலையில் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.

* எதையும் சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com