நேர மேலாண்மையை கடைபிடித்தால் எளிதில் வெற்றி நிச்சயம் !!

நேர மேலாண்மையை கடைபிடித்தால் எளிதில் வெற்றி நிச்சயம் !!

மாதச் சம்பளம்போல்தான் நமக்குக் கிடைத்துள்ள 30 நாள்கள் என்பதை உணர மாட்டார்கள். இந்த 30 நாள்களை எப்படிச் செலவு செய்வது என்பதைத் திட்டமிட வேண்டும்.

30 நாள்களுக்குள் ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்றால், அதற்கென தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்படிப் பகிர்ந்து செய்தால் அந்தச் செயலை எந்தவிதப் பதற்றமும் இன்றி முடித்துவிடலாம்.

இரவுத்தூக்கம் என்பது 7 முதல் 8 மணி நேரமாவது அவசியம். தூக்கம் கெடுவது என்றாலே அதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகம். தொலைக்காட்சி, இணையம், வாட்ஸ்அப் என அனைத்துக்கும் குறிப்பிட்ட கால அளவு மட்டுமே ஒதுக்கிச் செயல்படுங்கள். இணைய பயன்பாடு என்பது நமது தேவைக்கானதாக இருக்கட்டும்.

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கான பணிகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளராக விரும்பினால், இசைக் கருவிகளோடு அதிக நேரம் செலவிடுங்கள். எழுத்தாளராக விரும்பினால் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அதிக நேரம் ஒதுக்குங்கள். அதை ஒரு பழக்கமாகவே மாற்றுங்கள்.

ஒரு நாளில் நாம் செய்து முடிக்க பல்வேறு வேலைகள் இருக்கலாம். அவற்றில் எந்த வேலை முக்கியமோ, அதை முதலில் முடியுங்கள். செய்து முடிப்பதற்கான கால அவகாசம் இருக்கிறதா என்பதைக் கணக்கிடாமலேயே பல்வேறு வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்வதால், பெரிய நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். எனவே, செய்ய இயலாத வேலைகளுக்கு `முடியாது' என்று சொல்லிப் பழக வேண்டும். நேர மேலாண்மையில் இதுவும் முக்கியம்.

வார விடுமுறையை ஓய்வுக்காகப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் அடுத்த வாரத்தைப் புத்துணர்வுடன் தொடர முடியும். வார நாள்களை நன்முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தும்போது, வார விடுமுறையை மனஅழுத்தமில்லாமல் ஓய்வுக்குச் செலவிட முடியும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com