பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளே! இதோ உங்களுக்கான தேர்வு நேர உணவு பட்டியல் !!

பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளே! இதோ உங்களுக்கான தேர்வு நேர உணவு பட்டியல் !!

தேர்வு நேரத்தில் மாணவர்கள் உட்கொள்ளும் உணவு, தூங்கும் நேரம், மற்ற வழக்கங்களை முறையாக கடைபிடிக்காவிட்டால் நன்றாக படித்திருந்தாலும், சரியாக தேர்வு எழுதுவது கடினம்.

சிலருக்கு தேர்வு எழுதும்போது கைவிரல்கள் இழுத்துக்கொள்ளுதல், கண் இருட்டுதல் போன்றவை ஏற்படும். இப்படி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மனச்சோர்வு இல்லாமல், படித்தது மறக்காமல், ஆரோக்கியமான திட மனதுடன் தேர்வுக்காலம் முடியும்வரை இருக்க என்ன செய்ய வேண்டும்?

தேர்வுக்கூடத்துக்கு சாப்பிடாமல் செல்வது பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை உணராமல் போனால் தேர்வு எழுதும்போது கவனமின்மை, மனச்சோர்வு, விரைவாக விடையளிக்க முடியாத நிலை ஏற்படலாம். காலை உணவு எடுத்துக்கொள்வது கட்டாயம்.

அதிலும் காலை உணவில் வாழைப்பழத்தைச் சேர்த்துக்கொள்வது அவசியம். தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் தொடர்ந்து உட்கார்ந்து எழுதுவதால் ஏற்படும் கை, கால் சோர்வுக்குக் காரணம் பொட்டாசியம் சத்து குறைவுதான். அதை ஈடுகட்டும் சிறந்த உணவு எதுவென்று கேட்டால், அது வாழைப்பழமே.

குறைந்த அளவு இனிப்புச்சுவை கொண்ட மாவுப்பொருட்கள் மற்றும் புரதப் பொருட்கள் சேர்ந்த உணவே சமச்சீரான காலை உணவு. அனைத்து சத்துகளும் சமஅளவு கொண்ட வெண் பொங்கல் மற்றும் கேழ்வரகுப் புட்டு, அவித்த பச்சைப்பயறு கலவை உடலுக்குத் தேவையான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும்.

யான அதிக கலோரியைத் தொடர்ச்சியாக வழங்கும். எள்ளுருண்டை காலை உணவாக இருந்தால், தேர்வுக்குமுன் ஏற்படும் மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கலாம் என்று கூறப்படும் கருத்தை அறிவியலும் ஆமோதிக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com