ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள் !!

ஆரோக்கியத்திற்கு சில குறிப்புகள் !!

உடற்பயிற்சி செய்யாத, எடை அதிகமுள்ள பெண்களுக்கு, பெருங்குடலில் டைவெர்டிகுலர் என்ற நோய் ஏற்படக்கூடும். வாழ்க்கைமுறை, உடல் எடை, குடலின் மாறுபாடு போன்றவற்றுக்கு இடையேயான தொடர்புகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஸ்வீடிஷ் ஆராய்ச்சியில், குடலின் உட்பகுதியில் உப்பலான பைகள் போன்ற அமைப்பு ஏற்படுவதாக கண்டறிந்து உள்ளனர். தினமும் 30 நிமிடங்களுக்கும் குறைவாக உடற்பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கும் நோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிவப்புநெல்லி (கிரான்பெர்ரி) காப்ஸ்யூல்கள், சிறுநீர் குழாயில் அடிக்கடி ஏற்படும் தொற்றுகளை எதிர்க்கும் தினசரி ஆண்டிபயாட்டிக்குகளை விட குறைவான செயல்திறனே கொண்டிருக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இவற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகள் மிகவும் குறைவு. மேலும் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆண்டிபயாடிக்குகளின் வளர்ச்சியை இது ஊக்குவிக்கிறது.

ரெட் ஒயினில் உள்ள ரெஸ்வெரட்ரால் என்ற உள்பொருள், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வளர்ச்சி விளைவுகளைத் தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுப்பது தெரியவந்துள்ளது. ஆனால் ரெட் ஒயின், ரெஸ்வெரட்ரால் உள்பொருள்களை மார்பக புற்றுநோய்க்கான நேரடி சிகிச்சையாக எடுத்துக்கொள்ளலாம் என்று கருதக் கூடாது. “ரெட் ஒயின் போன்ற பொருள்களில் மறைந்துள்ள, நல்வாழ்வுக் கான ரகசியங்களை விஞ்ஞானிகள் இன்னமும் பிரித்தெடுக்கவில்லை என்றே கருத வேண்டும்”

பிரபல ஆண்டி பயாடிக்குகளைவிட பூண்டில் உள்ள உள்பொருள்கள்100 மடங்கு அதிக பலன் தருவதை அமெரிக்கா, வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீ ரியாதான் உலகிலேயே உணவின் மூலம் ஏற்படும் பெரும்பாலான பெருங்குடல் பிரச்சினை களுக்குக் காரணமாக இருக்கிறது. இந்தத் தொற்றுக்களில் பலவும் பச்சையான, சரியாக சமைக்கப்படாத சிக்கன் அல்லது உணவு தயாரிக்கப் பயன்படுத்தப் பட்ட பாத்திரங்களின் மேற்பரப்பு மாசுபட்டிருப்பதால் ஏற்படுகின்றன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com