உடல் நலம், மன நலத்தை காக்க புத்தகம் படியுங்கள் !!

உடல் நலம், மன நலத்தை காக்க புத்தகம் படியுங்கள் !!

வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் குளிப்பது, சாப்பிடுவது மாதிரி. முன்பெல்லாம் இரவு தூங்க செல்வதற்கு முன்பு புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றினார்கள். அந்த இடத்தை இப்போது மொபைல் போன்கள் பெற்றுவிட்டன.

விளைவு, மன அழுத்தத்தையும், வியாதிகளையும் சுமக்க வைத்துவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக மன நோய்களாகிறவர்களும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்துவதில் புத்தகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

நீங்கள் அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளானால், அதனை கட்டுப்படுத்த புத்தகங்கள் படிக்க முயற்சி செய்யலாம். அரை மணி நேரம் புத்தகம் படித்தால் ரத்த அழுத்தம், இதய துடிப்பு, மன உளைச்சல் குறையும் அநுபவ உண்மை.

புத்தக வாசிப்பு பழக்கம் மன அழுத்தத்தை மட்டுமின்றி மனச்சோர்வையும் சமாளிக்க உதவும். ஒரு நபர் மனச்சோர் வடைந்தால், தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம். அத்தகைய சமயத்தில் புத்தகம் வாசிப்பது கற்பனை உலகத்திற்குள் அழைத்து செல்லும். வாழ்க்கை தரத்தை மேம் படுத்தவும், புதிய யுக்திகளை கையாளவும் வழிவகை செய்யும்.

வயதானவர்கள் புத்தகம் படிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் அது பலவிதங்களில் நன்மை பயக்கும். குறிப்பாக தனிமை உணர்வை விரட்டியடிக்க புத்தகம் உற்ற நண்பனாக விளங்கும். வயதாகும்போது மனதை இலகுவாக்கிக்கொள்ள புத்தகங்கள் படிப்பது நல்லது.புத்தகம் படிக்கும் பழக்கத்தை தங்கள் குழந்தைகளும் பின்பற்றுவதற்கு வழிகாட்டவேண்டும். கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம். மின்னணு புத்தகங்களுக்கு பதிலாக காகித புத்தகங்களை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது.

புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது அறிவுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களையாவது புத்தகம் படிப்பதற்கு ஒதுக்க வேண்டும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com