அழுத்தத்தால் துவண்டு போன மனதுக்கு ஆறுதல் தரும் தியானம்  !!

அழுத்தத்தால் துவண்டு போன மனதுக்கு ஆறுதல் தரும் தியானம் !!

மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.

நம்மில் பெரும்பாலானவர்கள் அமைதியான, தெளிவான, மகிழ்ச்சியான மனதையே விரும்புகின்றனர். நாம் மன அழுத்தத்துடனோ அல்லது எதிர்மறை நிலையிலோ இருந்தால் அது நமக்கு சோகத்தைத் தரும். அது நம் ஆரோக்கியத்தைக் கெடுத்து, நம் பணி, குடும்ப வாழ்க்கை மற்றும் நட்பை பாதிக்கும்.

மன அழுத்தத்தாலோ, முன்கோபத்தாலோ நாம் துவண்டு போனால், நாம் நமக்கு உதவும் வகையில் தியானம் போன்ற வழிகளை நாடுவோம். தியானம் உணர்வுகளின் குறைபாடுகளைக் கடந்து வர உதவுகிறது, இதில் எதிர்மறை பக்கவிளைவுகள் எதுவுமில்லை.

தியானத்தை நாம் யதார்த்தமான அணுகுமுறையோடு அணுகவேண்டும். இது எல்லாவற்றிற்குமான உடனடித் தீர்வல்ல, எனினும் தியானத்தை நேர்மறை முடிவுகளைப் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தலாம். ஒரு சிறிய காரணத்தால் எப்போதுமே ஒரு முடிவை அடைந்து விட முடியாது, ஆனால் பல்வேறு காரணங்கள் மற்றும் நிபந்தனைகளால் இது சாத்தியம்.

உதாரணத்திற்கு, நமக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை சரிசெய்ய தியானம் உதவுகிறது, ஆனால் நமது உணவு முறை மாற்றம், உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வரும் முடிவுகளைப்போல இருக்காது.

logo
vnews27
www.vnews27.com