வெள்ளை சர்க்கரை சைவமா..? அசைவமா..?

வெள்ளை சர்க்கரை சைவமா..? அசைவமா..?

சர்க்கரை சைவமா அசைவமா என்னும் விவாதமே பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கலாம். ஆனால் அதன் உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமும் பலருடம் இருக்கிறது. சர்க்கரை ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியமற்றதா என்னும் கேள்விதான் பலரிடம் இருந்துள்ளது. ஆனால் இது புதுவிதமான விடைக்கான கேள்விதான். அப்படி நாம் இதுவரை எந்த விவாதத்திற்கு உட்படுத்தாத சர்க்கரையின் உண்மைகளை இங்கே காணலாம்.

வெள்ளை சர்க்கரை முதலில் கரும்புச் சாறில் இருந்துதான் பிரித்து எடுக்கப்படுகிறது. பின் அது சுத்திகரிப்பிற்கு செல்லும் போது அதன் நிறத்தை வெள்ளையாக மாற்ற விலங்கின் எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இடத்தில்தான் சர்க்கரையை அசைவமாக பார்க்கப்படுகிறது.

கரும்புச் சாற்றை சுத்திகரிக்கும்போது அதன் பளபளக்கும் வெள்ளை நிறத்திற்காகவும் , அடர்த்திக்காகவும் விலங்கின் எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. எலும்புகள் இயற்கை கார்பன் என்றும் அழைக்கப்படுகிறது. இது கால்நடைகளின் எலும்புகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எலும்பில் ட்ரைகால்சியம் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட் மற்றும் கார்பன் ஆகியவை உள்ளன. இது பல வணிக செயல்முறைகளில் வடிகட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் விலங்குகளின் எலும்புகளை தூள் செய்யப்பட்டு சர்க்கரை ஆலைகளுக்கு விற்கப்படுகின்றன. இது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உருவாக்கும் செயல்முறையின் போது பயன்படுத்தப்படுகிறது. PETA இன் இணையதளத்தின்படி, எலும்பு சர்க்கரையை பதப்படுத்துவதிலும் சுத்திகரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது ஒரு கச்சா வடிகட்டியைப் போல் செயல்படுகிறது. இது ஒரு நுண்துளைப் பொருள். கரும்புக்கு சரியான வெள்ளை நிறம் மற்றும் சிறந்த அமைப்பைப் பெறுவதற்கு நிறமாற்ற வடிகட்டியாக செயல்படுகிறது.

வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் எலும்புகளை கண்டறிவது கடினம்தான். ஆனால் சைவ உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவோருக்கு எலும்புக் கலப்படம் இல்லாத மாற்று வழிகளும் உள்ளன.பிரவுன் சுகரிலும் எலும்புத்தூள் கலக்கப்படுகிறது. இருப்பினும் சுத்திகரிக்கப்பட்ட கரும்பு சர்க்கரையுடன் வெல்லப்பாகுகளை கலப்பதன் மூலம் பழுப்பு நிறத்தை அடைகிறது.

பெரும்பாலான சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளில் எலும்புத்தூள் உள்ளது. நீங்கள் சர்க்கரையுடன் எலும்புதூள் சேர்ப்பதைத் தவிர்க்க விரும்பினால், சுத்திகரிக்கப்படாத மாற்று வழிகளுக்குச் செல்வது சிறந்தது. தேங்காய் சர்க்கரை, பழ சர்க்கரை, டேட்ஸ் சர்க்கரைஎன பல வகைகள் உள்ளன.

அதைத் தவிர, சர்க்கரைக்கு மாற்றான இயற்கையாகவே கிடைக்கும் தேன், மேப்பிள் சிரப், நீலக்கத்தாழை தேன், கந்தகமற்ற வெல்லப்பாகு, பேரீச்சம்பழம் மற்றும் பிரவுன் ரைஸ் சிரப் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com