உடல் எடையை குறைப்பது எந்த வயதிலும் சாத்தியமா?

உடல் எடையை குறைப்பது எந்த வயதிலும் சாத்தியமா?

40 வயதாக இருந்தால், உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான பணியோ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அப்படி இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் சுலபமாக எடையை குறைக்கலாம்.

காய்கறிகள் :

உங்கள் உணவில் பாதியளவு சாதம், மீதி காய்கறிகளால் ஆனதாக இருக்கட்டும். இறைச்சி மற்றும் தானியங்கள் என இரண்டும் சமமாக முக்கியமானவை என்றாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்த அதிக ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாகும். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள் உட்கொள்வதை நீங்கள் அதிகரிக்கலாம். ஏனெனில், அவை செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடை அதிகரிப்பதை தடுக்கின்றன.

உட்கொள்ளும் நீரின் அளவு :

உடலின் எடையைக் குறைப்பதில் அதிக நீர் உட்கொள்ளல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி நீர் அருந்துவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, நாளின் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதால், உங்கள் உணவுக்கு இடையில் பகலில் நீங்கள் உணரும் பசியையும் குறைக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரை ஒருவர் அருந்த வேண்டும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. 40 வயதிற்கு மேல் உங்கள் எடை குறைப்பில் அடிக்கடி நீர் அருந்துவது முக்கியமான ஒன்றாகும்.

சீரா இடைவெளியில் உணவு :

உணவைத் தவிர்ப்பதன் மூலம், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடும். காலை உணவு என்பது அன்றைய சமமான முக்கியமான உணவாகும். பழங்களுடன் ஓட்ஸ் அல்லது பழங்களுடன் முழு கோதுமை ரொட்டி போன்ற ஆரோக்கியமான காலை உணவு உட்கொண்டால் உங்கள் மதிய உணவின் போது ஆரோக்கியமற்ற அல்லது அதிகப்படியான உணவை எடுக்க உங்களை தூண்டும் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.

ஜங் ஃபுட்ஸ் வேண்டவே வேண்டாம் :

பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், குக்கீகள் போன்றவை பொதுவாக கலோரிகள், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் அதிகம் நிறைந்தவையாக இருக்கும். மேலும் அவை பெரும்பாலும் ஃபைபர், புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறைந்து காணப்படும் உணவுகள் ஆகும். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உங்கள் உணவில் இருந்து தவிர்ப்பது உங்கள் உடல் எடை குறைப்பை விரைந்து அதிகரிக்கும். தொப்பை கொழுப்பைக் குறைக்கும்.

உடற்பயிற்சி :

வழக்கமான செயல்பாடு, உடற்பயிற்சிகள் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். மேலும் எடையை குறைக்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி செய்வது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும் மற்றும் கொழுப்பை எரிக்க உதவும். ஒரு நாளைக்கு 30-40 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது நீங்கள் உணரும் முன்பே உங்கள் எடையை குறைக்கச் செய்யும். உடலில் காயங்கள் அல்லது உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் யோகா பயிற்சி செய்யலாம் அல்லது இடைவெளியுடன் நடைபயிற்சி செய்யலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com