டீயில் இவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கா? இந்த 5 டீ குடிங்க நோயில்லாமல் ஒஹோன்னு வாழலாம்.

டீயில் இவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கா? இந்த 5 டீ குடிங்க நோயில்லாமல் ஒஹோன்னு வாழலாம்.
h3ct02

உணவு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள் ஆனால் டீ இல்லாமல் பலரால் தமிழகத்தில் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நமது வாழ்க்கை முறையோடு ஒன்றிப் போயிருக்கும் டீ தன்னகத்தே எண்ணற்ற மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

டீ ஒரு பானம் அப்படிங்கிறத தாண்டி ஒரு மாமருந்து என்கிற சொல்லாடல் இன்னைக்கு நேத்தில்ல ரொம்ப காலமாகவே இருக்கு. சீனர்கள் பல காலமாக நோய்களைக் குறைப்பதற்கும், நோயெதிர்ப்பு சக்திக்காகவும் டீயைப் பயன்படுத்தி வராங்க..

நோய் எதிர்ப்பு சக்தியாக டீ பயன்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான அறிவியல் காரணங்களை நிறுவப்படவில்லை. இருப்பினும் டீயை பயன்படுத்தி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் எப்படி தக்க வைக்கலாம் என்பதை இந்தக் கட்டுரையில் காணலாம்.

கிரீன் டீ:

மற்ற டீக்களைப் போல அல்லாமல் கிரீன் டீக்கு பயன்படும் தேயிலைகள் அறுவடைக்குப் பிறகு வேகவைக்கப்படுகிறது. இது தேயிலையின் பச்சை நிறத்தை பாதுகாக்கப் பயன்படுகிறது. கிரீன் டீயில் நன்மை பயக்கும் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் கேடன்சிகள் அதிகமாக இருக்கின்றன. கிரீன் டீயில் உள்ள கேடன்சிகள் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்திற்கு எதிராக செயல்படலாம் என ஆய்வுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

மஞ்சள் டீ;

மஞ்சள் டீயில் குர்குமின் என்னும் வேதிப் பொருள் அதிகமாக இருக்கிறது, இந்த குர்குமின் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய நுண்ணுயிர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது.

ப்ளாக் டீ:

பிளாக் டீயில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த கேடன்சிகள் உள்ளன. இந்த கேடன்சிகள் உங்களை நோய்வாய்ப் படாமல் தடுக்கிறது. பிளாக் டீயில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்சிடண்ட்கள் வீக்கங்களை தணிக்கவும், இதய ஆரோக்கியத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.

ஒயிட் டீ:

ஒயிட் டீயில் உள்ள மூலக்கூறுகள் பாக்டீரியாகளில் இருந்து பற்களை பாதுகாக்க பயன்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஒயிட் டீ பயன்படுகிறது. மேலும் வயதாவதால் ஏற்படும் தோல் சுறுக்கத்தில் இருந்து தப்பிக்கவும் ஒயிட் டீ பயன்படுகிறது.

இஞ்சி டீ;

மஞ்சள் டீயைப் போலவே இதிலும் நுண்ணுயிர்களுக்கு எதிராக செயல்படும் திறன் அதிகமாக இருக்கிறது. மேலும் செரிமானத்திற்கு இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com