இன்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஜிம்மில் பல மணி நேரம் செலவிட்டு வருகின்றனர். அதே போன்று யாரை கேட்டாலும் ஜிம்மிற்கு செல்கிறேன், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறோம், தசைகளை வலிமையாக்குகிறேன் போன்றவற்றை சாதாரணமாக கூறுகின்றனர். இது ஒரு புதிய கலாச்சாரமாகவும் மாறி வருகிறது. ஜிம்மிற்கு செல்வது நல்லது தான், என்றாலும் எந்த வயதில் செல்ல வேண்டும் என்கிற வரையறை குறித்து பலரும் அறிந்திருப்பது இல்லை.
அதே போன்று இன்று பல பதின் பருவத்தினர் ஜிம்மிற்கு அதிகம் செல்கின்றனர். ஜிம் என்கிற சமூக தளங்களின் பார்வையினால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் என்று கூட சொல்லலாம். உடற்பயிற்சி முறையை விட, ஜிம்மிற்கு செல்வது ஒரு ஃபேஷன் டிரெண்டாகிவிட்டது. 14-15 வயதுடைய குழந்தைகள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள். இளம் வயதினர் ஜிம்மிற்குச் செல்வது சிறந்ததா? இல்லையென்றால், ஜிம்மிற்குச் செல்வதற்கான சரியான வயது என்ன என்பதைக் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
நமது உடல் வயதாக ஆக பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. டீன் ஏஜ் பருவத்தில் நமது தசைகள் பெரிதாகவும் வலுவாகவும் வளர்கின்றன. 17-18 வயதில் ஜிம்மில் தீவிரமான உடற்பயிற்சிகளின் காரணத்தால் அதை தாங்கும் அளவுக்கு நமது உடல் முதிர்ச்சியடைந்து வலுவடைகிறது. வளரும்போது நம் உடலும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கிறது. மேலும் நம் உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் சமாளிக்க நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அவசியம் தேவை.
ஜிம்மில் நம் உடலுக்கு அதிக அழுத்தத்தை தரும்போது அது ஒரு சிறந்த தேர்வாக இருக்க முடியாது. மேலும் அது நமது உடல் வளர்ச்சியையும் பாதிக்க கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல், யோகா போன்ற விளையாட்டு வகைகள் நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். ஜிம்மை காட்டிலும் இது போன்ற உடல் செயல்பாடுகளை செய்து வரலாம். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது மட்டுமே நம் உடலுக்குத் தேவையான உடல் பயிற்சியை அளிக்கும் என்பது அவசியமில்லை. 17-18 வயதுடைய இளைஞர்கள் அதிக எடை கொண்ட ஸ்கோட்ஸ் மற்றும் அதிக பளு தூக்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த வயதிற்குப் பிறகு, ஜிம்மில் சென்று உங்களுக்கான அதிக உடற்பயிற்சி செய்யலாம். ஏனெனில் அப்போது தான் உங்கள் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைகிறது. நீங்கள் நன்கு தகுதி பெற்ற ஒரு நல்ல ஜிம் பயிற்சியாளரின் ஆலோசனையோடு பயிற்சிகளை செய்து வருவது சிறந்தது. முதலில் ஜிம் பயிற்சிகளின் அடிப்படைகளில் இருந்து தொடங்கி, சரியான நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும் ஜிம்மில் செய்யும் பயிற்சிகளுக்கு ஏற்ப உங்கள் உணவு மற்றும் கலோரி உட்கொள்ளலை அவசியம் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த பலனை பெற முடியும்