சம்பாதித்த பணம் கையில் நிற்கவில்லையா? : இதை செய்து பாருங்கள் !!

சம்பாதித்த பணம் கையில் நிற்கவில்லையா?  : இதை செய்து பாருங்கள் !!

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை. பணத்தட்டுப்பாடு, பண இழப்பு, பண விரயம் போன்ற பிரச்சனைகள் பொதுவாக பலர் சந்திக்கும் பிரச்சனைகள் தான்.

பலர் தங்கள் வாழ்க்கையில் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. சில ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள், கெட்ட பழக்கங்கள் போன்றவை பணப் பற்றாக்குறைக்கு காரணமாகின்றன.

ஜோதிடத்தில் கூறப்பட்ட சில பரிகாரங்கள் பணம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதற்கும், சம்பாதித்த பணம் வீட்டில் தங்குவதற்கும், பண விரயம் ஆவதை தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குடும்ப தலைவன் தினமும் சந்தன திலகம் பூசி, வீட்டின் சமையலறையிலேயே உணவு உண்ண வேண்டும். இது பண வரவுக்கான புதிய வழிகளை உருவாக்கும். செல்வத்தைப் பெற, செல்வத்தின் அதிதேவதையான லட்சுமி தேவியின் அருள் அவசியம்.

இதற்கு அமாவாசை அன்று இரவு வீட்டின் வடகிழக்கில் பசு நெய் தீபம் ஏற்றவும். மேலும், பருத்தி திரிக்கு பதிலாக, சிவப்பு பருத்தி நூலை பயன்படுத்தவும். மேலும் தீபம் ஏற்றும் போது குங்குமப்பூ இழைகளை நெய்யில் போடவும். இப்படி விளக்கேற்றினால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.

செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மிக்கு வலம்புரிச் சங்கு மிகவும் பிடித்தமானது. வலம்புரிச் சங்கு என்பது சங்குகளில் ஒரு அரிய வகை ஆகும். இது இந்து நம்பிக்கைகளில் மிகப் புனிதமான சங்காகவும், செல்வ வளத்தையும், நலத்தையும் தருவதாக கருதப்படுகிறது. இது லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது.

வியாழன் அன்று வலம்புரி சங்குகளில் பால் நிரப்பி விஷ்ணு பகவானுக்கு அபிஷேகம் செய்யவும். இதனால் தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் பணம் வீட்டில் தங்கும். மேலும், பணம் வரவுக்கான புதிய வழிகள் ஏற்படும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com