புரோட்டீன் பவுடரால் ஆபத்தா?

பால், முட்டை அல்லது தாவர வகைகளில் இருந்து புரோட்டீன் சத்தை பிரித்து எடுத்து அதனுடன் வைட்டமின், மினெரல், சர்க்கரை, செயற்கை சுவையூட்டி, எல்லாம் சேர்த்து தயாரித்தால் அதுதான் புரோட்டின் பவுடர்.
புரோட்டீன் பவுடரால் ஆபத்தா?

புரோட்டின் பவுடர், நாம் உண்ணும் உணவுக்கு மாற்று கிடையாது, மாறாக நம் உணவோடு சேர்த்து எடுத்து கொள்ளப்படும் ஒரு சப்ளிமெண்ட் தான் என்பதை நாம் முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொண்டால் கிட்னி வீணாகிடும், எலும்பு தேய்ந்து போகும், கால்சியம் சத்து குறையும், ஆண்மை குறையும் என தவறான வதந்தி இருக்கின்றது. அதுபோன்ற பாதிப்பு நடந்ததாக இதுவரை ஆதாரம் ஏதும் இல்லை.

புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் சிறிய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

1. சிலருக்கு பால் அல்லது பால் சம்பந்தப்பட்ட உணவுகள் உடலுக்கு ஏற்காது, லேசான அரிப்பு போன்ற அலர்ஜி வரும். இதுபோன்ற அலர்ஜி இருப்பவர்கள் பாலால் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொண்டால் அலர்ஜி போன்ற பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது

2. புரோட்டீன் பவுடருடைய பாதுகாப்பை அந்தந்த நிறுவனங்களே மதிப்பிடலாம் என விட்டுவிட்டது, எனவே, ஒரு புரோட்டீன் பவுடரில் உற்பத்தியாளர்கள் கூறுவது உண்மையிலேயே உள்ளதா என்பதை அறிவது கடினம்.

புரோட்டீன் பவுடருடன் சேர்க்கப்படும் மற்ற பொருட்கள் மூலம் அலர்ஜி ஏற்படலாம். அனால் இது போல நடப்பது ரொம்ப குறைவு என்றாலும் ஜாக்கிரதை அவசியம்.

சில நிறுவனங்கள் சுவைக்காக புரோட்டீன் பவுடருடன் சர்க்கரையை அதிகம் சேர்பதுண்டு. இதனால உடல் எடை கூடுவதற்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஒரு நாளொன்றுக்கு பெண்கள் 24 கிராம், ஆண்கள் 36 கிராம் சர்க்கரை வரை எடுத்துக்கொள்ளலாம் பரிந்துரை செய்கிறார்கள்.

புரோட்டின் பவுடர், நாம் உண்ணும் உணவுக்கு மாற்று கிடையாது, மாறாக நம் உணவோடு சேர்த்து எடுத்து கொள்ளப்படும் ஒரு சப்ளிமெண்ட். உணவு மூலமாக புரோட்டீன் சத்தை பெற்றுக்கொள்வது மிகவும் சிறந்த வழி, ஒருவேளை புரோட்டீன் அதிகம் தேவைப்படும் பட்சத்தில் தாராளமாக நல்ல புரோட்டீன் பவுடரை பயன்படுத்தலாம், அதனால் நம் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடுத்துக்கொள்ளும் முன் பயிற்சியாளர்/மருத்துவர் பரிந்துரை அவசியம்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com