பிறந்த குழந்தையை செல்போனில் போட்டோ எடுப்பது சரியா?

பிறந்த குழந்தையை செல்போனில் போட்டோ எடுப்பது சரியா?

குழந்தை பிறந்ததும் செல்போனில் புகைப்படம் எடுப்பதற்கு பலரும் விரும்புகிறார்கள். குழந்தையுடன் செல்பி எடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள். சிலர் அதிக ரெஷல்யூஷன் கொண்ட கேமராக்களை பயன்படுத்தி போட்டோ எடுக்கிறார்கள். சிலர் ஒருபடி மேலே போய் போட்டோஷூட் நடத்தவும் திட்டமிடுகிறார்கள்.

குழந்தை பிறக்கும் சமயத்தில் தந்தையோ, நெருங்கிய உறவினர்களோ வெளியூரில் இருக்கும் பட்சத்தில் குழந்தையை போட்டோ எடுத்து அனுப்புகிறார்கள். சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை பெறுவதற்கும் முயற்சிக்கிறார்கள்.

கேமராவில் இருந்து வெளிப்படும் பிரகாசமான பிளாஷ்கள் குழந்தையின் கண்களுக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உண்மையில் அவ்வளவு வெளிச்சம் அதில் வெளிப்படுவது இல்லை. அறையின் உள் பகுதியில் சூழ்ந்திருக்கும் இருள் காரணமாக பிரகாசமாக தெரிகிறது.

பிறந்த குழதைகள் பெரும்பாலும் கண்களை மூடிக்கொண்டுதான் இருக்கும். இருப்பினும், முதல் இரண்டு வாரங்களில், இருண்ட அறையில் திடீரென ஒளி வீசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். பகல் பொழுதில் வெளியில் பிரகாசிக்கும் சூரிய ஒளியை விட கேமரா பிளாஷ் அதிக பிரகாசமானதும் கிடையாது. குழந்தையின் அருகில் இருந்தபடி மற்றவர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதும் நல்லதல்ல.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com