சீரற்ற மாதவிடாய் பிரச்சனையா? உங்களுக்கான உணவுகள் !!

சீரற்ற மாதவிடாய் பிரச்சனையா? உங்களுக்கான உணவுகள் !!

பெண்களுக்கு மிகவும் பொதுவான பிரச்சினையாக கருதப்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக எடை இழப்பு, உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள் என்னவென்று பார்க்கலாம்.

பப்பாளி : பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய் முறையாக வரும். பப்பாளி கருப்பையில் உள்ள சுருக்கங்களைத் தூண்டுவதோடு மட்டும் அல்லாமல் மாத விடாய் தூண்டுவதற்கு உதவும். பப்பாளியில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டுவதால் இது மாதவிடாயைத் தூண்டும் தன்மை கொண்டது.

​இஞ்சி : இஞ்சி தேநீர் ஏராளமான உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யக் கூடியது. இஞ்சியை தேநீருடனோ, தேனுடன் கலந்த இஞ்சி சாறு வடிவிலோ அல்லது வெறும் இஞ்சியை தேனுடன் கலந்தோ எடுத்துக் கொள்ளலாம்.

வழக்கமான மாதவிலக்கிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, ஒரு கப் இஞ்சி சாறை தண்ணீருடன் 2: 1 என்ற விகிதத்தில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதைகளில் ஏராளமான மருத்துவப் குணங்கள் இருக்கின்றன. 2 கப் தண்ணீருடன் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளைப் போட்டு ஒரு கப்பாக வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் விதைகளை வடிகட்டி எடுத்துவிட்டு, அந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு வேளை அரை கிளாஸ் அளவுக்கு குடித்து வர மாதவிடாய் சுழற்சி முறையாக இருக்கும்.

​வெந்தயம் : வெந்தயம் உடலில் உண்டாகும் அதிகப்படியான வெப்பத்தைக் குறைத்து, உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியைக் குறைக்கும் ஆற்றல் வெந்தயத்துக்கு உண்டு.

வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீருடன் வேகவைத்தோ அல்லது அப்படியே வடிகட்டியோ குடித்து வர வேண்டும். மோரில் வெந்தயப் பொடி சேர்த்தும் குடிக்கலாம்.

மாதுளை : மாதுளை பழத்தின் சாறு மாதவிடாயைத் தூண்டும் தன்மை கொண்டது. மாதுளம் பிஞ்சை விதையுடன் சேர்த்து சாப்பிட மாதவிடாய் காலத்து வயிறு வலி குறையும். மாதவிடாய்க்கு 10 நாட்களுக்கு முன்னதாக தினமும் மாதுளை சாறைக் குடிக்கத் தொடங்க வேண்டும். அப்படி செய்தால் மாதவிடாயும் சரியாக வரும். ரத்தப் போக்கும் சீராக இருக்கும்.

கற்றாழை : கற்றாழையை இரண்டாக வெட்டி அதன் ஜெல்லை பிழிந்து எடுத்து குறைந்தது 5 முறையாவது தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்த ஜெல்லுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து காலை உணவுக்கு முன் உட்கொள்ளுங்கள். இப்படி ஒரு வாரம் வரை செய்து வந்தால் மாதவிடாய் தூண்டப்படும்.

எள் : எள்ளுக்கு மாதவிடாயை வேகமாகத் தூண்டும் ஆற்றல் கொண்டது. எள் நம்முடைய உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்வதால் மாதவிடாயைத் தூண்டும். வழக்கமாக மாதவிடாய்க்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தே தினமும் அரை ஸ்பூன் வீதம் எள் சாப்பிட்டு வரலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com