உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கு ஆங்காங்கே கொழுப்புத் தசைகள் அதிகமாக இருப்பதால் அவர்களுடைய அழகே கெட்டுப் போய்விடும். அதேபோல சிலர் ஒல்லியாகவே இருந்தாலும் தாடையின் கீழ்ப்பகுதியில் மட்டும் தசை அதிகமாகி இரட்டை தாடை பிரச்சினை உண்டாகும்.
அவற்றை சரிசெய்ய வீட்டிலேயே என்ன மாதிரி சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
கன்னம் மற்றும் தாடைப்பகுதியில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதன் காரணமாக இந்த இரட்டை கன்னப் பிரச்சனை ஏற்படுகிறது. தாடைக்கு அடியில் அதிகமான சதை குவிந்து முகத்தின் தோற்றத்தையே மாற்றிவிடுகிறது.
இதனால் முக அழகும் கெடுகிறது. வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் வீட்டிலேயே நேரம் கிடைக்கும்போதெல்லாம் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தால் இந்த பிரச்சினை சரியாகும். கன்னம் மற்றும் தாடை பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான சில பயிற்சி முறைகளைத் தெரிந்து கொள்வோம் வாங்க.
யோக முத்திரைகளில் மீன் முத்திரையும் ஒன்று . இந்த முத்திரையில் உள்ளது போல வாயைக் குவித்து வைத்துக் கொண்டு செய்யப்படுவதால் கீழ் தாடையில் சேரும் கொழுப்புக்கள் குறையத் தொடங்குகின்றன.
இரண்டு கன்னப் பகுதிகளையும் குவித்து உள்நோக்கி இழுத்துக் கொள்ள வேண்டும். பின்பு பின்னர் உதட்டையும் உள்நோக்கி குவித்து மீன் வாய் போல் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்படி 30 வினாடிகள் வரை வைத்திருந்து பின்பு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.
இந்த பயிற்சியைத் தினமும் 10 முறை செய்து வர முகத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
பல்வேறு வகை யோக முத்திரைகளில் சிங்க முக முத்திரையும் ஒன்று. இந்த முத்திரையைச் செய்யும்போது கன்னத்தில் படித்திருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க இந்த பயிற்சி உதவுகிறது.
இந்த சிங்க முக முத்திரையைப் பயிற்சி செய்ய முதலில் இரண்டு கால்களையும் நன்கு மடித்து பத்மாசனத்தில் அமர வேண்டும்.
தலையை நேராக வைத்து, இரண்டு கைகளையும் தொடையின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சிங்கம் கர்ஜிப்பது போன்று நாக்கை வெளியே நீட்டி அப்படியே சில வினாடிகள் அமர்ந்து இருக்க வேண்டும்.
மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விடவும். மீண்டும் இயல்பு நிலைக்கு வர வேண்டும் இப்படி திரும்பத் திரும்ப குறைந்தது ஒரு நாளைக்கு ஐநு்து முறையாவது இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.