வாழ்க்கையை உற்சாகமாக நகர்த்துவது எப்படி..?

மன உளைச்சல் மற்றும் வேதனையில் இருந்து மனம் மீள்வது கொஞ்சம் கடினமாக ஒன்றுதான். அதிலிருந்து மீண்டு வர சில யோசனைகள்.
வாழ்க்கையை உற்சாகமாக நகர்த்துவது எப்படி..?

என்ன நடந்ததோ, நடக்கிறதோ, நடக்க இருக்கிறதோ எல்லாமும் சரிதான் என்ற நேர்மறை எண்ணங்களை விதைத்திடுங்கள். நினைத்தது நடந்தது சரி என்றும், நடக்காததை ரொம்பச் சரி என்றும் நினைத்துக்கொள்ளலாம். இதுவே, நம் பாதி மன உளைச்சலைக் குறைத்துவிடும்.

மாற்றங்களைப் பார்க்க அனைவருக்கும் ஆசைதான். அது நம்மிலிருந்து தொடங்குவது இன்னும் சிறப்பானது. விரைவில், நம் மாற்றம் நாம் விரும்பும் மாற்றமாகும். நம் வாழ்வியல் பழக்கங்களிலும், உணவுப் பழக்கங்களிலும் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவோம். தீயவற்றைக் கைவிடுவதும், புதிய முடிவை எடுப்பதும் நாமாக இருப்பின், அதுவே மாற்றத்திற்கான முதல் மற்றும் அடிப்படை வெற்றி.

உற்சாகம், ஊக்கம், ஆற்றல் என என்றென்றும் ‘பவர் பேக்டு’ மனிதராக மாறிவிடுங்கள். உற்சாகமான மனிதர்களைச் சந்திப்போம். உற்சாகத்தைப் பகிர்ந்தளிப்போம். இதோடு மற்றவர் உணர்வையும், அவர்களது சூழ்நிலையையும் அறியவேண்டும்.

இதுவே நம்மைச் சுற்றி ஒரு அன்பு வட்டத்தை அமைத்துக்கொடுக்கும். நேரங்களை கடந்த கால நினைவுகளுக்கும், பிடிக்காத விஷயங்களுக்கும், புறம்பேசுவதற்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும் வீணடிக்க வேண்டாம்.

பிடித்தவர், உறவினர், நண்பர்கள் என உங்களின் விருப்பப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உங்களின் நேரமே அவர்களுக்குப் பரிசாக அமையட்டும். பொருட்களைப் பரிசளிப்பதைவிட, உங்களின் நேரத்தைப் பரிசளிப்பது அவர்களுடன் உங்களின் உறவைப் பலப்படுத்தும்.

பணத்தைச் சேமிக்க எத்தனையோ திட்டங்கள் உண்டு. ஆனால், உங்களின் மகிழ்ச்சியைச் சேமிக்க ஒரு வங்கியைத் தொடங்குங்கள். அதன் பெயர் மகிழ்ச்சி வங்கி. அலுவலகத்தில் நீங்கள் இன்கிரிமென்ட் வாங்கினாலும் சந்தோஷம்தான்.

அதேபோல பிடித்த ஆடையை அணிந்து, அந்த ஆடையில் உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்ப்பதும் சந்தோஷம்தான். சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட பேப்பரில் எழுதி, ஒரு பாக்ஸில் சேமித்து வையுங்கள். மகிழ்ச்சி வங்கியின் கணக்கின் முதல் கோட்டீஸ்வரர் நீங்கள்தான்.

நன்றி, மன்னிப்பு இந்த இரண்டு வார்த்தைகளையும் தாராளமாகப் பயன்படுத்துங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தெரிவித்து விடுங்கள். ‘சின்ன உதவிதானே’ என்றோ ‘சின்ன தப்புத்தானே’ என்றோ அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பெருந்தன்மையாக இருப்பது, நிறைய விஷயங்களை சாதிக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com