குழந்தைகளுக்கு புத்தகம் வாங்க வேண்டுமா?இதோ உங்களுக்கான ஆலோசனைகள் !

குழந்தைகள் ஆர்வமுடன் படிக்க வேண்டும் என்கிறீர்களா? அதற்கு புத்தகம் அவர்களுக்கு பிடித்ததாக இருக்க வேண்டும். அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நீங்கள் அறிந்து அந்த புத்தகத்தை வாங்கலாம்.
குழந்தைகளுக்கு புத்தகம் வாங்க வேண்டுமா?இதோ உங்களுக்கான ஆலோசனைகள் !

நீங்கள் மட்டும் கடைக்கு சென்று புத்தகம் வாங்கி வராதீர்கள். இந்த கால குழந்தைகள் வேறு ரகம். அவர்களே அவர்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தைகள் வீட்டில் ஏதோ ஒன்றை சிறப்பாக செய்தவுடன் அவர்களை பாராட்டும் தொனியில் ஒரு நல்ல கதை புத்தகம் வாங்கி தருவதாக உறுதியளியுங்கள். அப்போது அவர்களிடம் என்ன கதை புத்தகம் வேண்டும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்தநாள் காலையில் நீங்கள் அலுவலம் செல்லும் போது இன்று மாலை புத்தகம் வாங்கி வருகிறேன் என்று கூறி ஆர்வத்தை தூண்டுங்கள். ஆனால் புத்தகம் வாங்கி வருவதும், வாங்கி வராமல் மேலும் ஆர்வத்தை தூண்டுவதும் உங்கள் விருப்பம்.

புத்தகம் வாங்கவில்லை என்றால் குழந்தையிடம் மன்னிப்பு கோரி விட்டு அன்று மாலையோ அல்லது அடுத்த நாளோ குழந்தையை கடைக்கு அழைத்து சென்று சிறிது நேரத்தை அங்கேயே செலவழித்து அவர்களுக்கு பிடித்த புத்தகத்தை வாங்கி கொடுங்கள்.

ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் வாங்குவதே போதுமானது. பல புத்தகங்கள் வாங்கினால் அவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அடுத்த புத்தகம் நோக்கி தாவி விடுவார்கள். 3-8 வயது குழந்தைகளுக்கு படக்கதை புத்தகமே சிறந்தது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com