இளம் பெண்களையும் தாக்கும் ஹார்ட் அட்டாக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !!

இளம்பெண்களின் 75 சதவீத மாரடைப்பு நோய்க்கு தவறான வாழ்க்கை முறை தான் முக்கிய காரணம் என ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.
இளம் பெண்களையும் தாக்கும்  ஹார்ட் அட்டாக் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் !!

வயதானவர்களுக்கு மட்டுமே வரும் நோய்களில் ஒன்று என முன்னர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மாரடைப்பு, தற்போது வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் தாக்குகிறது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றமே ஆகும்.

அதிலும், குறிப்பாக சமீபகாலமாக இளம்வயது பெண்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப் படுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் மூலம் கீழ்காணும் வாழ்க்கை வழி முறைகளைப் பின்வற்றுவது இதயத்திற்கு நல்லது எனத் தெரியவந்துள்ளது.

அந்த ஆறு வாழ்க்கை முறைகளாவன :-

ஆரோக்கியமான எடையை பராமரிப்பது.

புகை பிடிக்காமல் இருப்பது.

வாரத்திற்கு 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்வது வாரத்தில் ஏழு மணி நேரத்திற்கு மேல் டி.வி பார்க்காமல் இருப்பது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு முறை மது அருந்துவது.

ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பது.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே டி.வி பார்க்க வேண்டும். காரணம் ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அதிக நேரம் டி.வி பார்ப்பவர்கள் சிறு வயதில் இறந்து போவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது

மேற்கூறிய இந்த ஆறு வழிமுறைகளை தங்கள் வாழ்வில் கடைபிடிக்கும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 92 சதவீதம் குறைவதாகவும், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 66 சதவீதம் குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதமான அளவு மது அருந்தும் பெண்களுக்கு, அதிகமாக மது அருந்துபவர்கள் மற்றும் மதுவே அருந்தாதவர்களை விட நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் இந்த வழிமுறைகளை தங்கள் இளைய வயதிலேயே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது எதிர்காலத்தில் இதய நோய்களை தடுப்பதற்கான எளிய வழி என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com