சிறுதானியங்களில் இருக்கும் ஆரோக்கியம் !!
உணவிலிருந்து தொடங்குவது தான் ஆரோக்கியம். "உணவே மருந்து', "மருந்தே உணவு' எனும் தத்துவங்கள் மக்கள் மனதில் மீண்டும் புத்துயிர் பெறுகின்றன. எனவே தானிய வகைகளை நீங்களும் சாப்பிடுங்கள், ஆரோக்கியம் உத்தரவாதம்.
சிறு தானியங்கள் ஒரு காலத்தில் தமிழர்கள் உணவாக திகழ்ந்தன. நம் முன்னோர்கள் தெம்பும் திடகாத்திரமுமாக நோய் நொடி அண்டாமல் வாழ்ந்தார்கள் என்றால், அவர்களது வாழ்க்கை முறையில் இடம்பெற்ற சிறுதானிய உணவே அதற்கு ஒரு காரணம்.
முந்தைய காலங்களில் பலருடைய வீட்டில் சிறு தானியங்கள் இருக்கும். ஆனால், காலப்போக்கில் இந்த உணவுப்பழக்கம் அலட்சியப்படுத்த ப்பட்டது. அதற்கு பதில் புதுப்புது உணவு வகைகள், மூலைக்கு மூலை ஹோட்டல்கள், பீட்சா , பேக்கரி ஐட்டங்கள், என்று கண்டதையும் ஆசை ஆசையாக சாப்பிட்டு கெட்டகொழுப்பு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், என்று பல்வேறு நோய்களுக்கு ஆளான பிறகு இப்போது ஞானோதயம் பிறந்திருக்கிறது.

சிறு தானியங்களை சமைப்பதில் உள்ள தடை அதன் எளிமை அல்லது கடினம் பற்றியது தாண்டி, மாறாக அது குறித்த விழிப்புணர்வு நமக்கு இல்லை அது தான் உண்மை. முன்னர் போதிய சமையல் குறிப்புகள் இல்லை என அவற்றை ஒதுக்கினோம்,
ஆனால் இன்று அது ஒரு பிரச்சனையே இல்லை எளிய வழிகள் இருக்கின்றன. அன்றாட சமையல் முறைகளிலே அரிசிக்கு பதிலாக சிறு தானியங்களை நாம் பயன்படுத்தலாம். உடல் உழைப்பு என்றால் என்ன என்பது கூட அறியாத தலைமுறையாக மாறிவரும் நமக்கு சிறு தானியங்கள் சந்தேகமே இல்லாமல் ஒரு வரப்பிரசாதமே.