வெள்ளை முடியை கருப்பாக்கும் ஆளி விதை !! கருப்பாக மாற என்ன சாப்பிட வேண்டும்

வெள்ளை முடி கருப்பாக மாற என்ன சாப்பிட வேண்டும்
வெள்ளை முடியை கருப்பாக்கும் ஆளி விதை !! கருப்பாக மாற என்ன சாப்பிட வேண்டும்

இன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம்.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.

இளமையில் ஏற்படும் வெள்ளை முடிக்கு ஆயுர்வேத சிகிச்சையை நீங்கள் தேடுகிறீர்களானால், நீங்கள் ஆளி விதையை முயற்சி செய்யலாம், ஏனெனில் இது உங்களுக்கு லாபகரமான ரிசல்ட்டை தரும்.

ஆளி விதை எண்ணெய் - 1/4 கப், நீர் - 2 கப், எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆளி விதை எண்ணையும், தண்ணீரையும் ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்பு அது கெட்டியாகும் வரை சூடாக்கி, இறுதியில் எலுமிச்சை சாற்றை அதனுடன் சேர்த்து கலக்க வேண்டும். கெட்டியாகும் இந்த ஜெல்லை எடுத்து ஆறவைத்து உங்கள் முடிக்கு தடவலாம்.

ஆளி விதையை நன்கு காயவைத்து அதை அரைத்து கொள்ளுங்கள். பின்பு இதை தயிருடன் கலந்து ஹேர் பேக் போல முடியின் வேர்க்கால்கள் வரை அப்ளை செய்யுங்கள். கூந்தல் முழுவதுமாக தடவி விட்டு, ஒரு அரை மணி நேரம் கழித்து முடியை அலசிக் கொள்ளவும். இதை வாரத்திற்கு இருமுறை செய்தால் முடி பளபளவென இருக்கும், முடி நன்கு அடர்த்தியாக வளரும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com