நீரிழிவு நோயால் கண் பார்வை பாதிப்பு

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 பேரில் ஒருவருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் கண் பார்வை பாதிப்பு

இந்தியாவில் நீரிழிவு மற்றும் நீரிழிவு விழித்திரை நோய் தொடர்பாக 50 மாதங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், நீரிழிவு நோயாளிகளில் 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 25 பேரில் ஒருவருக்கு கண் பார்வைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நீரிழிவு விழித்திரை நோய் (டயாபட்டிக் ரெட்னோபதி) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயாளிகளில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25 பேரில் ஒருவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்படுவது என்பது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு நாட்டில் அது பேரழிவை ஏற்படுத்தும். ஆரம்ப கால நோயறிதல் மற்றும் சிகிச்சையை நாம் செய்ய தவறினால் குருட்டுத்தன்மை தொற்று நோய் ஏற்படும்.

நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பார்வை பாதிப்புகளை முன்கூட்டியே பரிசோதிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்காக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முறையான பரிசோதனை திட்டங்களை மூத்த மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. நீரிழிவு நோயாளிகளை பரிசோதித்து கேரளா ஏற்கனவே கொள்கை முடிவை எடுத்துள்ளது. அது போன்று மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று காத்திருப்பதற்கு பதிலாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல டாக்டர்கள் பரிந்துரைக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயாளிகளையும் விழித்திரை நோய் பரிசோதனை செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் சுகாதார பணியாளர்கள் கேள்விகளை கேட்டு நோயின் ஆபத்தை மதிப்பிடலாம். ரத்த மாதிரிகளையும் சேகரித்து பரிசோதிக்கலாம். இதில் ஆபத்தில் உள்ளவர்களை பல சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com