நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கான உடற்பயிற்சி !!

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கான உடற்பயிற்சி !!

கோவிட்-19 தொற்றினால் சில அலுவலக ஊழியர்கள் இன்னும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிகளை தொடர்ந்து வருகின்றனர். வீட்டிலிருந்தே வேலை செய்வது வசதியாக இருந்தாலும் பலரின் உடலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசிகள் மற்றும் லேப்டாப்களில் தொடர்ந்து பயன்படுத்தியபடியே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் தலை மற்றும் கழுத்து பகுதிகள் நிறைய பாதிப்புகளை சந்திக்கிறது. குறிப்பாக அடிவயிற்றில் தொப்பை விழுவதோடு, மார்பு பகுதி சரிந்து முதுகு சுருண்டு போகிறது.

நீண்ட நேரம் உட்காருவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் சில உடல் அசைவுகளில் சில நிமிடங்கள் ஈடுபட வேண்டும். எளிய 10 நிமிட உடற்பயிற்சி போதும் இந்த பிரச்சனைகளை சரி செய்ய. இந்த பயிற்சியானது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும்.

* நாற்காலியில் உட்கார்ந்தபடியே கால்களை உயர்த்தி உயர்த்தி இறக்குதல் - 5 முறை

* உட்கார்ந்தபடியே கால்களை நேராக மேலே உயர்த்தி இறக்குதல் - 5 முறை

* ஷோல்டர் ஸ்ட்ரெச் - 5 கவுன்ட்ஸ்

* காஃப் ஸ்ட்ரெச் (இருபுறமும்) - 5 முறை

* ஹாம்ஸ்ட்ரிங் ஸ்ட்ரெச் - 5 முறை

* அப்பர் பாடி ட்விஸ்ட் - 5 கவுன்ட்ஸ்

* ஆர்ம் ஸ்ட்ரெச் - 5 கவுன்ட்ஸ்

* பேக் & நெக் ஸ்ட்ரெச் - 5 கவுன்ட்ஸ்

* பேக் & நெக் ஸ்ட்ரெச் 2 - 5 கவுன்ட்ஸ்

நீங்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலைபார்ப்பவர் என்றால் மேலே குறிப்பிட்டுள்ள எளிய உடற்பயிற்சிகளை செய்து நல்ல பலன்களை பெறுங்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com