இதயத் துடிப்பு எப்போதாவது நின்றிருக்கிறதா?

இதயத் துடிப்பு எப்போதாவது நின்றிருக்கிறதா?

இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் சமமாக, சீராக இருக்க வேண்டும். உங்கள் இதயம் சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு அடிக்கடி துடிப்பதையும், படபடப்பதையும் அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிப்பதையும் உணவீர்கள். இதை தான் மருத்துவர்கள் ஹார்ட் பல்பிடேஷன்ஸ் (Heart palpitations) என்கிறார்கள்.

இது சில ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக அடிக்கடி நிகழ்கிறது என்பதால் அதில் மாற்றங்களை செய்தால் போதுமானதாக இருக்கும். அவைகள் என்னென்ன? எப்போதெல்லாம் ஹார்ட் பல்பிடேஷன்ஸ் ஏற்படலாம்? எதெற்கெல்லாம் அச்சம் கொள்ள தேவையில்லை? எந்த கட்டத்தில் மருத்துவ உதவி தேவைப்படும்? என்பதை பற்றி அறியலாம்.

கட்டுப்பாடற்ற மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று - ஹார்ட் பல்பிடேஷன். நீங்கள் கடுமையான மன அழுத்தம் அல்லது கவலையை உணரும் போது உங்கள் இதயம் "சீரற்ற முறையில்" துடிக்க ஆரம்பிக்கும். இந்த நிலை 'பேனிக் அட்டாக்'கிற்கும் வழிவகுக்கும்.

ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறது. கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இது அதிகம் கவனிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தின் போது ஹார்மோன் ரெகுலேஷன் மற்றும் நேச்சுரல் ரீப்ரொடெக்ஷன் சைக்கிள் ஆனது இதயத் துடிப்பை தற்காலிகமாக அதிகரிக்கலாம் மற்றும் ஹார்ட் பல்பிடேஷனுக்கும் வழிவகுக்கலாம்.

தலைவலி, தூக்கமின்மை மற்றும் அமைதியின்மையை தவிர்த்து இது ஹார்ட் பல்பிடேஷனுக்கும் வழிவகுக்கும். நிகோடினை விட்டு வெளியேறிய 3 முதல் 4 வாரங்களுக்குள் வரும் இந்த நிலையை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகியவை நிகோடின் வித்ட்ராவலுக்கான முக்கிய அறிகுறிகளாகும்.

ஆஸ்துமா இன்ஹேலர்கள், இருமல் மற்றும் சளி மருந்துகள் மற்றும் பிறவும் உங்கள் இதயத்தை வேகமாக துடிக்கச் செய்து, படபடக்கச் செய்யலாம். இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு வைத்துக்கொள்ளவும்.

உங்கள் உடல் வெப்பநிலை 100.4 -க்கு மேல் செல்லும் போதெல்லாம் உங்கள் இதயம் படபடப்பதை நீங்கள் உணரலாம்.

மார்பில் வலி அல்லது அழுத்தம், மூச்சு திணறல், மயக்கம் போன்ற பாதிப்புகளை நீங்கள் சந்தித்தால் அல்லது ஏதேனும் ஒரு அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com