இடையழகியாக மாற போறீங்களா? அதற்கான ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

இடையழகியாக மாற போறீங்களா? அதற்கான ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!!

தற்போது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள விரும்பும் ஒன்று மெல்லியதாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என் பதுதான். அத்துடன் மெல்லியதாக இருப்பவர்கள் தங்களை இறுக்கமாகவும், சிக்கென்றும் வைத்துக் கொள்கிறார்கள்.

மெல்லியதாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால் அதே சமயம் அவர்கள் நீரை அதிகம் குடிப்பதோடு, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவ ற்றில் ஈடுப ட்டு எப்போதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் நன்கு சாப்பிட்டாலும், நீரை அதிக அளவில் குடிப்பதால், அவர்களின் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி உடலானது ஆரோக்கியமாக இருக்கும். குண்டாக இருந்து மெலிய நினைத்தால், மெலிந்தவர்களின் டயட்டை பின்பற்றவும்.

நீங்கள் மெல்லியதாக இருக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உட லில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும். உடலை ஆரோக்கியமாகவும், மெல்லி யதாகவும் வைத்துக் கொள்ள சாப்பாட்டில் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைத்துவிடும்.

மெல்லியதாக இருப்பவர்கள் தங்கள் உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து வருவார்கள். இதனால் தான் அவர்களின் உடலில் கொழுப்புக்கள் தங்குவதில்லை. மேலும், அவர்களை எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை.

மெல்லியதாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க மற்றொரு இரகசியம் தான் அவர்கள் உண்ணும் உணவின் அளவு. மெல்லியதாக இருப்பவர்கள் எப்போதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடமாட்டார்கள். மேலும் சீரான இடைவெளியில் சாப்பிடுவார்கள்.

வாழ்க்கையில் நமக்கு பிடித்ததை செய்தாலே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அதிலும் மெல்லியதாக இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்களின் உடலில் கொழுப்புக் கள் தங்குவதில்லை.

இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். அதிலும் ஒருவருக்கு குறைந்தது 7 – -8 மணிநேர தூக்கமானது மிகவும் அவசியம். இதை மெல்லியதாக இருப்பவர்கள் சரியாக கடைப்பிடிப்பார்கள். எனவே தான் அவர்கள் ஆரோக்கியாகமாகவும், மெல்லியதாகவும் இருக்கிறா ர்கள்.

மெல்லியதாக இருப்பவர்கள் ஒரே நேரத்தில் தான் அதிகம் சாப்பிடமாட்டார்கள். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை ஏதேனும் சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளிவிட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புக்கள் தங்குவதைத் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க தான் ஜிம் செல்ல வேண்டும் என்பதில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் ஜிம் செல்லலாம் என்ற கருத்தை மனதில் கொண்டு மெல்லியதாக இருப்பவர்கள் அன்றாடம் 1/2 முதல் 1 மணிநேரம் ஜிம் மில் நேரத்தை செலவழிப்பார்கள்.

மெல்லியதாக இருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் உணவுகளை தவிர்க்க மாட் டார்கள். சீரான இடைவெளியில் சரியான நேரத்தில் உணவுகளை மறக்காமல் சாப்பி டுவார்கள்.

இனிப்புக்களை அளவாக சாப்பிடுவார்கள் ஒல்லிக்குச்சி போன்று இருப்பவர்களுக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் இருக்கும்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com