புடவைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் எது தெரியுமா?

புடவைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல் எது தெரியுமா?

டீன் ஏஜ் பெண்கள் முதல் வயதானோர் வரை, தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதை விட, கூந்தல் நன்றாக இருக்கவும், வளரவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மெனக்கெடுகின்றனர். ஆனால், எவ்வளவு தான் தலைமுடி நன்றாக வளர்ந்தாலும், சில நேரங்களில் என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்று குழப்பமாக இருக்கும். அதனாலே பெரும்பாலும் கூந்தலை ஜடை பிண்ணியோ, அல்லது எளிதாக கொண்டை போட்டோ பல பெண்கள் தங்கள் சிகையலங்காரத்தை முடித்துக் கொள்கின்றனர்.

அதுவும் குறிப்பாக, புடவை கட்டும் போது, என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்பது பல பெண்களுக்கு புதிராகவே இருக்கும். உங்களுக்காகவே, ஒரு எளிதான போனிடெயில். இது வழக்கமான போனிடெயில் போல அல்லாமல், டிரென்டியாக இருக்கும். இதை செய்ய சில நிமிடங்களே போதும்.

முதலில் எப்போதும் போனிடெயில் போடுவது போல, உங்கள் கூந்தல் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, ஒரு டிராஸ்பிரான்ட் ஹேர் டை மூலம் கட்டவும். உங்கள் தலைமுடி மிகவும் இறுக்கமாக இழுக்காமல் இருப்பதையும், மிகவும் தளர்வாக இருக்கக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக, ரப்பர் பேண்டிற்கு மேலே, கூந்தலை சற்று பிரித்து, ஏற்கெனவே போட்டுவைத்த போனிடெயிலை அப்படியே, அந்த இடைவெளியில் லேசாக திணிக்கவும். உங்கள் டிரென்டி போனிடெயில் ரெடி.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com