உங்களுக்கு மூக்கு சுத்தி தோல் உரியுதா?

உங்களுக்கு மூக்கு சுத்தி தோல் உரியுதா?

பொதுவாக இரண்டு வகையான சருமம் உள்ளது. ஒன்று எண்ணெய் பசை சருமம் மற்றொன்று வறட்சியான சருமம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்குள்ள பிரச்சனை, முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தவாறு முகப்பரு, பிம்பிள் பிரச்சனையுடன் இருக்கும்.

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்கமான சொரசொரப்பான சருமம் என்று இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும்.

அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, ஒருசில இடங்களான மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும்.

இவற்றைத் தவிர்க்க ஒருசிலவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் வறட்சியைத் தவிர்க்கலாம். இப்போது மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.

பெட்ரோலியம் ஜெல்லி மூக்கைச் சுற்றி வரும் வறட்சியை நீக்க, பெட்ரோலியம் ஜெல்லியை தடவ வேண்டும். இதற்கு எந்த ஒரு நேரமும் இல்லை. எப்போது வேண்டுமானாலும், தடவலாம். ஆனால் தினமும் இரவில் படுக்கும் முன், தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் வறட்சி அதிகமானால் அரிப்பும், வலியும் அதிகமாகும். ஆகவே வறட்சியான சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சி நீங்கும்.

ஸ்கரப் தூசிகளும், அழுக்குகளும் முகத்தை பொலிவிழந்து வெளிக்காட்டும். இப்படி பொலிவிழந்து காணப்படும் சருமத்தை தினமும் ஸ்கரப் செய்யாவிட்டால், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வளைவுகள் உள்ள இடங்களில் தங்கி, நிலைமையை மோசடையச் செய்யும்.

எனவே எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். மேலும் இந்த செயலை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.

மற்றொரு மாஸ்க் வேண்டுமெனில் இந்த மாஸ்க்கையும் போடலாம். அது என்னவெனில் முட்டையின் மஞ்சள் கருவுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலமும் வறட்சியைத் தடுக்கலாம்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com