சப்ளிமெண்ட்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா?

ஊட்டச்சத்து குறைபாட்டை நிறைவு செய்வதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் சப்ளிமெண்ட்டுகள் சில அதிகமாக எடுத்துக் கொள்வதினால் புற்றுநோய் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
சப்ளிமெண்ட்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா?

நம் உடலில் ஏற்படுகிற ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்து உடலை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உணவைத் தாண்டி நாம் எடுத்துக் கொள்வது தான் ஊட்டச்சத்துக்கள் கொண்ட சப்ளிமெண்ட்டுகள்.

அவற்றில் பெரும்பாலாாரால் எடுத்துக் கொள்ளப்படுகிற சில அடிப்படையான சப்ளிமண்ட்டுகள் சிலவகை புற்றுநோய்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் உடலில் ஏற்படுகிற ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்து உடலை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உணவைத் தாண்டி நாம் எடுத்துக் கொள்வது தான் ஊட்டச்சத்துக்கள் கொண்ட சப்ளிமெண்ட்டுகள். அவற்றில் பெரும்பாலாாரால் எடுத்துக் கொள்ளப்படுகிற சில அடிப்படையான சப்ளிமண்ட்டுகள் சிலவகை புற்றுநோய்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பீட்டா கரோட்டீன் சருமத்தை இளமையாக வைத்திருப்பது, கண்கள் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு மிகவும் அடிப்படையான ஊட்டச்சத்துக்களில் ஒன்று ஆகும். இது அதிக அளவில் கேரட், ஸ்பின்னாச், லெட்யூஸ், உருளைக் கிழங்கு, ப்ரக்கோலி ஆகியவற்றில் அதிகமாக நிறைந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 20 மில்லிகிராமுக்கும் அதிகமாக இந்த பீட்டா கரோட்டீன் சப்ளிமெண்ட்டுகள் எடுக்கும்போது நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 18 சதவீதம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

​வைட்டமின் ஈ நம்முடைய உடலுக்கு மிகத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களில் ஒன்று. இந்த வைட்டமின் ஈ- ஐ இயற்கையான வேர்க்கடலை, பாதாம், ஸ்பின்னாச், மிளகு போன்றவற்றில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இதை நிவர்த்தி செய்ய வைட்டமின ஈ சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. ஆனால் இந்த சப்ளிமெண்ட்டுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, இது எலும்புகளை பலவீனப்படுத்துவது முதல் புரோஸ்டேட் புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

இயற்கையான உணவுகளின் மூலம் பெறுவதைத் தாண்டி சப்ளிமெண்ட்டாக எடுத்துக் கொள்ளும் போது, இது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com