சிலிண்டர் வெடித்து விபத்தா? இனி வாய்ப்பே இல்லை : வந்துவிட்டது வெடிக்காத சிலிண்டர் !!

சிலிண்டர் வெடித்து விபத்தா? இனி வாய்ப்பே இல்லை : வந்துவிட்டது வெடிக்காத சிலிண்டர் !!

பழைய வகை எரிவாயு சிலிண்டர்கள் வெப்பம் அதிகமாகும்போது இந்த சிலிண்டர்கள் வெடிக்கும் தன்மை கொண்டவை. கனமான ஸ்டீல் தகடினால் செய்யப்பட்ட பழைய சிலிண்டர்கள் பெண்கள் திடீரென நகர்த்தி மாற்றுவதற்கு கூட கடினமாக இருந்து வந்தது. இந்த சிக்கல்களை சரிசெய்ய நீண் நாட்களாக ஆராய்ச்சி செய்யப்பட்டு ண்டுபிடிக்கப்பட்டதுதான் Composite வகை சிலின்டர்கள்.

தற்போது இந்தியாவில் 10 கிலோ மற்றும் 5 கிலோ composite சிலிண்டர்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. பல லேயர்களால் ஆன இந்த சிலிண்டர்கள் இலேசானவை, துரு பிடிக்காதவை, குறைந்த எடை கொண்டவை,

பார்ப்பதற்கு அழகானவை அவற்றையெல்லாம் விட எளிதில் வெடித்துவிடாத பாதுகாப்பானவை. கூடுதல் சிறப்பம்சமாக இந்த வகை சிலிண்டர்களில் எவ்வளவு எரிவாயு மிச்சம் உள்ளது என்பதை பார்க்க முடியும்.

நீங்கள் தற்போது எரிவாயு சிலிண்டர் வாங்கும் டீலர்களிடம் பேசி இந்த சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான டெபாசிட் தொகை ஸ்டீல் சிலிண்டர்களை விட சிறிது அதிகம். அந்த கூடுதல் தொகையை மட்டும் செலுத்திவிட்டு இந்த சிலிண்டர்களுக்கு மாறிவிடலாம்.

முதற்கட்டமாக பெரிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Composite வகை சிலிண்டர்கள் படிப்படியாக நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com