ஆண்களுக்கு 99 சதவிகிதம் பயனளிக்கும் கருத்தடை மாத்திரைகள்

ஆண்களுக்கு 99 சதவிகிதம் பயனளிக்கும் கருத்தடை மாத்திரைகள்

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் கருத்தடை மாத்திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், கருத்தடை மாத்திரை என்றால் அது பெண்களுக்கானது என்ற நிலையே இருந்து வருகிறது. தற்போது, ஆண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை முற்றிலும் பாதுகாப்பானது, 99% வரை பலனளிக்கக்கூடியது என்று தெரியவந்துள்ளது

இந்த புதிய கருத்தடை மாத்திரையை பயன்படுத்தும் ஆண்களுக்கு பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது. ஏனென்றால், இந்த மாத்திரைகள் ஹார்மோன் அல்லாத கருத்தடை மாத்திரைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பத்தைத் தடுப்பதில் 99 சதவிகிதம் பயனுள்ளதாக இந்த புதிய கருத்தடை மாத்திரைகளை இருப்பதாக பரிசோதனைகள் கூறுகின்றன.

தற்போது, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளும் கட்டத்தில் இந்த கருத்தடை மாத்திரைகளின் சோதனைகள் உள்ளன. ஆனால் இந்த மாத்திரையில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் என்றறும், அது இந்த கருத்தடை மாத்திரை மருந்து சந்தைக்கு வருவதைத் தடுக்கலாம் என்று சில நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள்.

நான்கு வாரங்கள் தொடர்ந்து ஆண் எலிகளுக்கு YCT529 என்ற வேதிப்பொருளின் தினசரி டோஸ் கொடுத்த விஞ்ஞானிகள், அவற்றின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்ததைக் கண்டறிந்தனர். மருந்து நிறுத்தப்பட்ட நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் எலிகளால் மீண்டும் சரியாக இனப்பெருக்கம் செய்ய முடிந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பரிசோதனைகளில் பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் டெஸ்டோஸ்டிரோன், ஆண் பாலின ஹார்மோன், எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் பிற எதிர்மறை விளைவுகள் கொண்டவையாக இருக்கின்றன.

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து கருவுறும் தன்மையை குறைக்கும் இந்த கருத்தடை மாத்திரை தொடர்பான மனிதர்கள் மீதான மருத்துவ ஆய்வுகள் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com