உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள் !!

உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள் !!

உடல் எடை குறைப்பை நோக்குபவர்களுக்கு சியா மற்றும் சப்ஜா விதைகள் என இரண்டும் பிரபலமான உணவுகள். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை குறைப்பை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. சியா மற்றும் சப்ஜா விதைகள் ஒரே மாதிரியாக தோன்றுவதால் இரண்டும் ஒன்றுதான் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் அவற்றை உற்று நோக்கும்போது உங்களால் வித்தியாசத்தை உணர முடியும்.

சியா விதைகளில் கலோரிகள் குறைவாக உள்ளன மற்றும் குளூட்டன் (Gluten) இல்லாதவை. பொதுவாக சியா விதைகளை சாலட் மற்றும் ஸ்மூதியில் சேர்த்து ஊட்டச்சத்து அடர்த்தியான உணவின் பலன்களை நாம் பெறலாம். சியா விதைகளில் 6 சதவீதம் தண்ணீர், 46 சதவீதம் கார்போஹைட்ரேட், 34 சதவீதம் கொழுப்பு, 19 சதவீதம் புரதம் உள்ளது. 28 கிராம் விதைகளில் 138 கலோரிகள் உள்ளன. 100 கிராம் சியா விதைகளில் 486 கலோரிகள், 16.5 கிராம் புரதம், 42.1 கிராம் கார்ப்ஸ், 30.7 கிராம் கொழுப்பு அடங்கியுள்ளன.

ஒழுங்கான முறையில் சியா விதைகளை நீங்கள் உட்கொள்ளும் போது, அவை உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிகிறது. மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது, ஆரோக்கியமான எடையை பராமரிக்க மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன; மற்றும் அகால வயதைத் (ப்ரீமெச்சூர் ஏஜிங்) தடுக்க உதவுகிறது. இது கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

சியா விதைகள் தாவர அடிப்படையிலான புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தசையை வளர்ப்பதற்கும், இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துவதற்கும், மற்றும் கொழுப்பை எரிப்பதற்கும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. புரோட்டீன், நீங்கள் நீண்ட நேரம் பசி உணராமல் இருக்க உதவுகிறது. மற்றும் பசியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது, உங்கள் கலோரி அளவையும் குறைக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com