டிஜிட்டல் திரையில் வாசிப்பதால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்

வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது.
டிஜிட்டல் திரையில் வாசிப்பதால் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்

அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் ஒரு வாழ்க்கை அனுபவம்; புத்தகங்கள் அறிவு சார்ந்தது. புத்தகங்கள் ஒரு சமூகம்.

புத்தகங்கள் இல்லையென்றால் மனிதர்களுக்கு தற்போது இருக்கும் பண்புகள் இருந்திருக்காது.

மனித  இனத்தின் மிகச் சிறந்த கண்டுப்பிடிப்புகளில் ஒன்று, படிப்பறிவு.

நம் பரிணாம வளர்ச்சி எனும் கடிகாரத்தில், கண் இமைக்கும் நொடியில் வாசிப்பு உருவானது.  வாசிப்பு பழக்கம் தொடங்கி வெறும் ஆறாயிரம் ஆண்டுகளே ஆனது.  எத்தனை மது பாத்திரங்கள் அல்லது கால்நடைகள் நம்மிடம் உள்ளன என்பதை குறித்ததில் தொடங்கியது வாசிப்பு. எழுத்துக்கள் தோன்றியதால் அறிவை  சேமிக்கவும், நினைவில் வைத்து கொள்ளவும் ஒரு சிறந்த  முறை உருவானது.

கணினி மென்பொருள் மூலம் பங்குச் சந்தையில் லட்சங்களை சம்பாதிக்க முடியுமா?

ஏலத்தில் தங்கத்தை விட அதிகமாக விலை போன விண்கல்லின் பாகங்கள்

மனித மூளை வடிவமைப்பின் முக்கிய அமைப்பை மாற்றும் சக்தி கொண்டது  வாசிப்பு.  இது பார்வை திறன்,  மொழி திறன், சிந்தனை  திறன், உணர்வு திறன் ஆகியவற்றுக்குள் ஒரு புதிய தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது.  ஒவ்வொரு புதிய வாசிப்பாளருக்கும்  உண்மையில் புத்துணர்ச்சியை தருகிறது. அது நம் மூளையில் இயல்பாக உருவாக வில்லை.

படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டிய ஒவ்வொரு நபரும் தங்கள் மூளையில் ஒரு புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஒரு நல்ல கதையை வாசிப்பது என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை விட அதிக நன்மைகள்  அளிக்கக்கூடியது.  வாசிப்பு பழக்கத்திற்கு பல மருத்துவ  ரீதியான நன்மைகள் உள்ளன. வாழ்வில் ஏற்படும் நோய்களுக்கு  தீர்வாக புனைவுகளை பரிந்துரைக்கும் கலையே நூலியல் மருத்துவம் பிப்லியோதெரபி.படைப்பாற்றலும், அறிவாற்றல், கருணை ஆகிய மூன்று  அற்புதமான திறன்களை  வாசிப்பு அளிக்கிறது.

நீங்கள் படிக்கும் போது, உங்கள் மூளை தியான நிலைக்கு செல்கிறது.  உங்கள் இதயத் துடிப்பு சீராகி, உங்களை அமைதிப்படுத்தி, பதட்டத்தைக் குறைக்கும் ஒரு செயல்முறையாக வாசிப்பு உள்ளது.

நாம் மேலோட்டமாக படிக்கும்போது, நாம் தகவலை மட்டும் பெறுகிறோம். நாம் ஆழமாகப் படிக்கும்போது, நமது பெருமூளைப் புறணியை (cerebral cortex)  அதிகம் பயன்படுத்துகிறோம்.  ஆழ்ந்த வாசிப்பு என்பது நாம் தொடர்பு முறையை உருவாக்குவதாகும்.  நாம் அனுமானங்களை உருவாக்குகிறோம். இது நம்மை உண்மையிலேயே விமர்சனம், பகுப்பாய்வு, கருணை கொண்ட மனிதர்களாக உருவாக்குகிறது.

புத்தகம் வாசிப்பை ஒரு வேலை என்று நாம் நினைக்கிறோம், ஆனால் புத்தகம் வாசிப்பு ஒரு விநியோக செயல் திறன் கொண்டது (Delivery Mechanism)

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com