இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா?

வங்கிக் கணக்கிற்கு மட்டுமல்லாமல் ஆயுள் காப்பீடு, கல்விக்கான காப்பீடு, டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் என்று எல்லாவற்றுக்குமே நாமினி குறிப்பிடப்பட வேண்டும்.
இன்சூரன்ஸ் பாலிசியில் குழந்தையை நாமினியாக சேர்க்கலாமா?

இன்ஷூரன்சைப் பொறுத்தவரை, நாமினியின் முழு விவரங்களை காப்பீடு வாங்கும் நபர் துல்லியமாகக் குறப்பிட வேண்டும். அதில் ஏதேனும் ஒரு சிறிய தவறு செய்தால் கூட, நாமினிக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது.

நீங்கள் காப்பீடு வாங்கும் போது, உங்கள் மைனர் குழந்தையையும் நீங்கள் நாமினியாக தேர்வு செய்யலாம். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யும் நாமினி மைனராக இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஒரு கார்டியனையும் நீங்கள் அப்பாயின்ட் செய்யலாம்.

அதாவது உங்களுடைய மைனர் நாமினிக்கு 18 வயது ஆகும் வரை அவரின் சார்பாக, கார்டியன் நாமினியாக செயல்படுவார். ஆனால் குழந்தைக்கு 18 வயதான பின்பு குழந்தை முழு நாமினியாக மாறி காப்பீட்டின் பலன்களைப் பெரும்.

இதில், ஒருவரை மட்டும் நாமினியாக குறிப்பிடும் பொழுது அது மற்றவர்களுக்கு பிரச்சனையாக அல்லது பாதகமாக மாறலாம். பெரும்பாலும் பணம் தான் குடும்ப பிரச்சனைகளில் வேராக இருக்கிறது. கிளைம் தொகை நாமினிக்கு மட்டும் தான் செலுத்தப்படும்.

இதனால் உங்கள் குடும்பத்தில் உங்களைச் சார்ந்திருக்கும் மற்றவர்களுக்கு நாமினி செய்த நபர் உதவி செய்யாமல் போகும் சூழ்நிலை ஏற்படலாம்.

இத்தகைய பிரச்சனையை நீங்கள் எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை இன்சூரன்ஸில்ல் குறிப்பிடலாம். உதாரணமாக, உங்கள் இன்சூரன்ஸ் நாமினியாக உங்கள் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் இன்று அனைவரையுமே நீங்கள் நாமினியாக குறிப்பிடலாம்.

அதுமட்டுமின்றி கிளைம் தொகை எவ்வாறு செட்டில் செய்ய வேண்டும், எவ்வளவு தொகையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய விவரத்தையும் நீங்கள் பாலிசியில் குறிப்பிடலாம். இதன் மூலம் குடும்பத்தில் நிதி சம்பந்தமான பிரச்சனை ஏற்படாது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com